Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • தடை நீங்கியது... 7 ஆண்டுகளுக்கு பின் களம் இறங்கும் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்

தடை நீங்கியது... 7 ஆண்டுகளுக்கு பின் களம் இறங்கும் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்

By: Nagaraj Sat, 28 Nov 2020 08:46:03 AM

தடை நீங்கியது... 7 ஆண்டுகளுக்கு பின் களம் இறங்கும் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்

7 ஆண்டுகளுக்கு பின்னர் களம் இறங்குகிறார் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஸ்ரீசாந்த். ஆனால் ஐபிஎல் தொடரில் சூதாட்டத்தில் ஈடுப்ட்டதாக குற்றம் சாட்டப்பட்டு இவருக்கு 7 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருந்த்து. அந்த தடை இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்தது.

இதனையடுத்து அவர் மீண்டும் கிரிக்கெட் விளையாட தாயராகி வருகிறார். அதற்காக அவர் தீவிரமான பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தார். அந்த வகையில், தற்போது இவருக்கு, கேரள மாநிலத்தில் நடைபெற இருக்கும் பிரசிடெண்ட் கோப்பை டி20 தொடரில் பங்கேற்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் கொச்சியில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

sreesanth,t20 series,ban,kerala,kochi ,ஸ்ரீசாந்த், டி20 தொடர், தடை, கேரளா, கொச்சி

இதுகுறித்து ஸ்ரீசாந்த் கூறுகையில், எனக்கு வாய்ப்பளித்த கேரள மாநில கிரிக்கெட் சங்க தேர்வாளர்களுக்கு நன்றி. என்னுடைய 7 ஆண்டு காத்திருப்புக்கு கிடைத்த பலன்'' எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2007 உலகக்கோப்பை டி20 தொடரை வென்ற தோனி தலைமையிலான இந்திய அணியில்,ஸ்ரீசாந்த் பெரும் பங்களிப்பை கொடுத்தார். இந்தியாவுக்காக 27 டெஸ்ட் போட்டிகளில் 87 விக்கெட்டுகளையும் 53 ஒருநாள் போட்டிகளில் 75 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

Tags :
|
|