Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • இந்த ஆண்டுக்கான டிஎன்பிஎல் போட்டியை ரத்து செய்யப்படலாம் என எதிர்பார்ப்பு

இந்த ஆண்டுக்கான டிஎன்பிஎல் போட்டியை ரத்து செய்யப்படலாம் என எதிர்பார்ப்பு

By: Karunakaran Sat, 01 Aug 2020 7:59:04 PM

இந்த ஆண்டுக்கான டிஎன்பிஎல் போட்டியை ரத்து செய்யப்படலாம் என எதிர்பார்ப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் பல்வேறு போட்டிகள் ஒத்தி மற்றும் தள்ளி வைக்கப்பட்டன. அதன்படி, 5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஜூன் 10-ந் தேதி முதல் ஜூலை 12-ந் தேதி வரை நடக்கவிருந்த நிலையில் கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

தள்ளிவைக்கப்பட்ட டி.என்.பி.எல். போட்டியை ஆகஸ்டு, செப்டம்பர் மாதத்தில் நடத்தலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஆலோசித்து வந்த நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தற்போது அதிகமாக உள்ளதால் இந்த மாதத்தில் போட்டியை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் எதுவுமில்லை.

tnpl,tournament,corona virus,canceled ,டி.என்.பி.எல்., போட்டி, கொரோனா வைரஸ், போட்டி ரத்து

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ந்தேதி முதல் நவம்பர் 8-ந்தேதி வரை நடக்கவுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த முன்னணி வீரர்களான ஆர்.அஸ்வின், எம்.விஜய்தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் விளையாட உள்ளதால் இந்த நேரத்தில் டி.என்.பி.எல். போட்டியை நடத்துவது பொருத்தமாக இருக்காது.

ஐ.பி.எல். முடிந்ததும், உள்ளூர் ஆட்டமான ரஞ்சி கிரிக்கெட் தொடங்கவுள்ளது. இதனால் டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கு உகந்த காலம் கிடைப்பது மிகவும் கடினமாகும். எனவே, இந்த ஆண்டுக்கான டி.என்.பி.எல். போட்டியை ரத்து செய்வது குறித்து இன்னும் ஓரிரு வாரங்களில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிக்கலாம்.

Tags :
|