Advertisement

டெல்லிக்கு பெரிய இலக்கை நிர்ணயித்து அசத்தியது மும்பை அணி

By: Nagaraj Thu, 05 Nov 2020 10:22:50 PM

டெல்லிக்கு பெரிய இலக்கை நிர்ணயித்து அசத்தியது மும்பை அணி

முதல் பிளே ஆஃப் சுற்றில் டெல்லிக்கு பெரிய இலக்கை நிர்ணயித்தது மும்பை அணி.

அரபு அமீரகத்தில் 13 ஐபிஎல் 2020 தொடர் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

எட்டு அணிகள் பங்கேற்ற லீக் சுற்றில் மொத்தம் 56 போட்டிகள் நடைபெற்றது. இதில் முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

batting,mumbai team,ipl,delhi team,200 runs ,பேட்டிங், மும்பை அணி, ஐ.பி.எல், டெல்லி அணி, 200 ரன்கள்

முதல் இரண்டு இடங்களை பிடித்த மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான முதல் குவாலிபயர் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது. டெல்லி அணியின் பவுலர் நார்ட்ஜே, 4 ஓவர்களே வீசி 1 விக்கெட் எடுத்து 50 ரன்களை வழங்கினார். டேனியல் சாம்ஸ் 4 ஓவர்களில் 44 ரன்களை வழங்கினார்.

Tags :
|