Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • கிரிக்கெட் நடுவர்கள் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது

கிரிக்கெட் நடுவர்கள் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது

By: Nagaraj Fri, 25 Dec 2020 10:46:01 AM

கிரிக்கெட் நடுவர்கள் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது

கிரிக்கெட்டில் நடுவர்கள் ஓய்வு பெறும் வயது 60-ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 89வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத்தில் நேற்று நடைபெற்றது. கிரிக்கெட் வாரிய முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில், ஐ.பி.எல். தொடரில் கூடுதலாக 2 அணிகளை சேர்ப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது.

இதனையடுத்து இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் உள்ளூர் போட்டிகள் தடை செய்யப்பட்டிருக்கிறது.

women,cricket,umpires,retirement age,increase ,பெண்கள், கிரிக்கெட், நடுவர்கள், ஓய்வு வயது, அதிகரிப்பு

இதனால் வீரர், வீராங்கனைகளுக்கு ஏற்பட்டு இருக்கும் பொருளாதார இழப்பை ஈடுகட்டும் வகையில் உரிய இழப்பீடு தொகையை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, இந்திய சீனியர் கிரிக்கெட் அணிக்கான தேர்வுக்குழு உறுப்பினர் பதவிக்கு சேத்தன் சர்மா, அபேய் குருவில்லா, தெபஷிஷ் மொகந்தி ஆகிய மூன்று பேர் பெயர்களை பிசிசிஐ-யின் கிரிக்கெட் ஆலோசனைக்குழு பரிந்துரை செய்திருக்கிறது. மேலும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அங்கீகாரம் பெற்ற நடுவர்கள் மற்றும் ஸ்கோரர்களின் ஓய்வு பெறும் வயதை 55-ல் இருந்து 60 ஆக உயர்த்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பெண்கள் கிரிக்கெட் வளர்ச்சிக்காக அதிக போட்டிகளை நடத்தவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.

Tags :
|