Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • கொரோனாவுக்கு மத்தியில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் இன்று தொடக்கம்

கொரோனாவுக்கு மத்தியில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் இன்று தொடக்கம்

By: Karunakaran Mon, 31 Aug 2020 7:08:15 PM

கொரோனாவுக்கு மத்தியில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் இன்று தொடக்கம்

‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் இன்று தொடங்கியது. இந்த போட்டி வரும் 13-ந்தேதி வரை நடக்கிறது. கொரோனா வைரஸ் காரணமாக, விம்பிள்டன் உள்பட பல தொடர் ரத்தானது. கொரோனாவுக்கு மத்தியில் நடக்கும் முதல் ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டி இதுவாகும்.

கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடக்கும் இந்த போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது. விளையாடும் போது, சாப்பிடும் போது தவிர எப்போதும் வீரர்கள் முககவசம் அணிந்திருக்க வேண்டும், ஸ்டேடியம் பகுதியில் நுழையும் போது உடல் வெப்பநிலை சோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும்.

us open tennis,tournament,coronavirus,new york ,யுஎஸ் ஓபன் டென்னிஸ், போட்டி, கொரோனா வைரஸ், நியூயார்க்

இந்த போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ள ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச் பட்டம் வெல்வதற்கே பிரகாசமான வாய்ப்புள்ளது. காயத்தால் சுவிட்சர்லாந்து ஜாம்பவான் ரோஜர் பெடரரும், கொரோனா அச்சத்தால் நடப்பு சாம்பியன் ஸ்பெயினின் ரபெல் நடால், முன்னாள் சாம்பியன் சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா ஆகியோரும் விலகியிருப்பது ஜோகோவிச்சுக்கு நல்ல வெற்றி வாய்ப்பை உண்டாக்கியுள்ளது.

பெண்கள் பிரிவிலும் நடப்பு சாம்பியன் பியான்கா, ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி, 2-ம் நிலை வீராங்கனை சிமோனா ஹாலெப், உக்ரைனின் ஸ்விடோலினா உள்ளிட்டோர் கொரோனா பீதியால் விலகி விட்டனர். இதுவரை 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள 38 வயதான செரீனா வில்லியம்ஸ் இதில் வெற்றி பெற்றால், அதிக கிராண்ட்ஸ்லாம் ருசித்தவரான ஆஸ்திரேலியாவின் மார்க்கரேட் கோர்ட்டின் சாதனையை சமன் செய்து விடுவார். ஆனால் தற்போது செரீனாவிடம் ஆக்ரோஷம் இருக்கிறதே தவிர, அதை வெற்றியாக மாற்றக்கூடிய சாமர்த்தியம் குறைந்து விட்டது. முன்னணி நட்சத்திரங்கள் விலகியுள்ள நிலையில் செரீனா அதை சாதகமாக பயன்படுத்திக் கொள்வாரா? என்பது முடிவில் தான் தெரியும்.

Tags :