Advertisement

தரவரிசை பட்டியலில் முதலிடத்தை நெருங்கும் விராட் கோலி

By: Nagaraj Mon, 28 Dec 2020 2:18:17 PM

தரவரிசை பட்டியலில் முதலிடத்தை நெருங்கும் விராட் கோலி

முதலிடத்தை நெருங்கும் விராட் கோலி... சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலிடத்தை நோக்கி நெருங்கி வருகிறார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் டி20 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி முடிவடைந்துள்ள நிலையில் ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்ததன் மூலம் 2 புள்ளிகள் பெற்று 888 புள்ளிகளுடன் இந்திய அணி கேப்டன் விராட் கோலி இரண்டாம் இடத்தில் உள்ளார்.

first,approaching,virat kohli,13 points ,முதலிடம், நெருங்குகிறார், விராட்கோலி, 13 புள்ளிகள்

ஆனால் இந்த டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் வெறும் 1 ரன்கள் மட்டுமே எடுத்ததால் ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் 10 புள்ளிகள் சரிந்து 901 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

இதன் மூலம் விராட் கோலி மற்றும் ஸ்மித்திற்கு இடையேயான இடைவெளி 13 புள்ளிகளாக குறைந்துள்ளது. இதேபோல் பந்து வீச்சில் முதல் டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இந்திய சுழல் பந்து வீச்சாளர் அஸ்வின் இந்திய வீரர் பும்ராவை பின்னுக்குத் தள்ளி 9 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

முதல் டெஸ்டில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் 910 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

Tags :
|