Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • மெஸ்சியை ஒப்பந்தம் செய்ய ரெடியாக இருக்கிறோம்; மான்செஸ்டர் சிட்டி அதிரடி

மெஸ்சியை ஒப்பந்தம் செய்ய ரெடியாக இருக்கிறோம்; மான்செஸ்டர் சிட்டி அதிரடி

By: Nagaraj Sun, 11 Oct 2020 9:30:01 PM

மெஸ்சியை ஒப்பந்தம் செய்ய ரெடியாக இருக்கிறோம்; மான்செஸ்டர் சிட்டி அதிரடி

மெஸ்சியை ஒப்பந்தம் செய்ய நாங்க எப்பவும் ரெடி என்று மான்செஸ்டர் சிட்டி அறிவித்துள்ளது.

சமீபத்தில், பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வரும் அர்ஜென்டினா கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி அந்த அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அணியில் இருந்து விலகுவதாக அறிவித்து வந்தார். மேலும் டிரான்ஸ்பர் முறையில் மெஸ்சி மான்செஸ்டர் அணிக்காக விளையாட எண்ணினார்.

அதாவது லயோனல் மெஸ்சியின் ஒப்பந்த காலமானது 2021 ஆம் ஆண்டு வரை நீடிக்கும் நிலையில், தன்னை அணியில் இருந்து விடுவிக்குமாறு மெஸ்சி கடிதம் எழுதிய நிலையில் ரூ.6 ஆயிரம் கோடி கட்டணமாக செலுத்த வேண்டும் என்று அணி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது.

இதனால் மெஸ்சி 2020-21 ம் ஆண்டுக்காக பார்சிலோனா கிளப் அணியில் விளையாட உள்ளதாக அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மெஸ்சியுடன் இணைந்து விளையாடிய லூயிஸ் சுவாரஸை பார்சிலோனா வெளியேற்ற, இது மெஸ்சிக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் 2020-2021 சீசன் முடிந்த பின்னர் மெஸ்சியை ஒப்பந்தம் செய்ய தயாராக இருப்பதாக மான்செஸ்டர் சிட்டி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சமீபத்தில் பார்சிலோனா அணியுடனான கருத்து வேறுபாடுகளுக்கு மன்னிப்பு கேட்கும் வகையில் மெஸ்சி ஒரு பேட்டியினைக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|