Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • சென்னை சூப்பர் கிங்சின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்கள் இருந்தது என்ன ?

சென்னை சூப்பர் கிங்சின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்கள் இருந்தது என்ன ?

By: Karunakaran Sat, 24 Oct 2020 3:35:36 PM

சென்னை சூப்பர் கிங்சின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்கள் இருந்தது என்ன ?

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்ற எல்லா சீசனிலும் அடுத்த சுற்றுக்குள் கால்பதித்த ஒரே அணி என்ற பெருமை பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அதனை நேற்றோடு தகர்ந்து விட்டது. நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை அணி இதுவரை 11 ஆட்டங்களில் ஆடி 8-ல் தோற்றுவிட்டது. ஒரு சீசனில் சென்னை அணியின் மோசமான செயல்பாடு இது தான். இதற்குமுன், 3 முறை சாம்பியன், 5 முறை 2-வது இடம் என்று ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் சாதனை அணியாக வலம் வந்தது.

ஐ.பி.எல். தொடங்குவதற்கு முன்பாக ரெய்னா, சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் இருவரும் கொரோனா அச்சத்தால் விலகினர். சென்னை அணியின் பேட்டிங் முதுகெலும்பாக அறியப்படும் ரெய்னாவின் விலகல் பேரிடியாக விழுந்தது. இருக்கிற வீரர்களை வைத்து சமாளித்துக் கொள்ளலாம் என்ற ‘கணக்கு’ பொய்த்து போனது. ‘ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பவர்’ என்று வர்ணிக்கப்படும் டோனி தொடக்க ஆட்டங்களில் 7-வது வரிசையில் இறங்கியது சலசலப்பை ஏற்படுத்தியது.

downfall,chennai super kings,ipl 2020,mumbai indians ,வீழ்ச்சி, சென்னை சூப்பர் கிங்ஸ், ஐபிஎல் 2020, மும்பை இந்தியஸ்

இளம் வீரர்களை ஓரங்கட்டி விட்டு தொடர்ந்து சொதப்பிய கேதர் ஜாதவுக்குமீண்டும் மீண்டும் வாய்ப்பு வழங்கியது விமர்சனத்திற்கு உள்ளானது. ஜாதவ் தேவையான நேரத்தில் மட்டையை சுழட்டாமல் மந்தமாக ஆடி வெறுப்பேற்றியதுடன் சில ஆட்டங்களில் தோல்விக்கு காரணமாக ரசிகர்களால் வறுத்தெடுக்கப்பட்டார். நீண்ட இடைவெளிக்கு பிறகுகளம் கண்ட டோனியின் பேட்டிங் எடுபடவில்லை. 39 வயதான அவரது ஆட்டத்திறன் வெகுவாக குறைந்து விட்டதை கண் கூடாக பார்க்க முடிந்தது.

இந்தியாவில் ஐ.பி.எல். கிரிக்கெட் நடக்கும் போது வெளியூரில் தோற்றாலும் சென்னை சேப்பாக்கம் மைதானம் தங்களது கோட்டை என்பதை எப்போதும் சென்னை அணியினர் நிரூபித்து இருக்கிறார்கள். இந்த முறை ஐ.பி.எல். அமீரகத்துக்கு மாற்றப்பட்டதால் அங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு தக்கபடி மூத்த வீரர்களால் திறம்பட செயல்பட முடியவில்லை. ஒரு ஓட்டையை அடைத்தால் இன்னொரு ஓட்டை விழுந்து விடுகிறது என்று முன்பு எப்போதும் இல்லாத வகையில் டோனியின் புலம்பலே அணி பலவீனத்துக்கு சான்று. இந்த ஐ.பி.எல்.-ல் அதிக வயது கொண்ட வீரர்களை கொண்ட அணி சென்னை தான். இந்த தடவை அனுபவம் கைகொடுக்கவில்லை.

Tags :