Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஐபிஎல் தொடரில் பென் ஸ்டோக்ஸ் எப்போது விளையாடுவார் - வார்னே விளக்கம்

ஐபிஎல் தொடரில் பென் ஸ்டோக்ஸ் எப்போது விளையாடுவார் - வார்னே விளக்கம்

By: Karunakaran Thu, 01 Oct 2020 6:35:05 PM

ஐபிஎல் தொடரில் பென் ஸ்டோக்ஸ் எப்போது விளையாடுவார் - வார்னே விளக்கம்

இங்கிலாந்து அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான பென் ஸ்டோக்ஸின் தந்தை நியூசிலாந்தில் உள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திடீரென பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்து புறப்பட்டுச் சென்றார். இதன் காரணமாக, அவர் இங்கிலாந்துக்கு எதிரான ஒயிட்-பால் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவில்லை.

நியூசிலாந்து சென்றுள்ள பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் தொடர் தொடங்கியபோது ஐக்கிய அரபு அமீரகம் திரும்பவில்லை. இதனால் முதல் பாதி தொடரில் விளையாடுவது சந்தேகம் எனக் தெரிவிக்கப்பட்டது. மேலும், அவரைப் பற்றி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பெரிதாக கவலைப்படவில்லை. இந்நிலையில் அந்த அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கும் ஷேன் வார்னே நேற்றைய போட்டியின்போது அணியுடன் இணைந்தார்.

ben stokes,ipl series,warne,new zealand ,பென் ஸ்டோக்ஸ், ஐபிஎல் தொடர், வார்ன், நியூசிலாந்து

இந்நிலையில் பென் ஸ்டோக்ஸ் அணிக்கு எப்போது திரும்புவார் என்பது குறித்து வார்னே கூறுகையில், எப்படியும் இந்த வருட ஐபிஎல் தொடரில் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளது. அவர் மிகப்பெரிய இழப்பு. எங்களுடைய நினைப்பு அவருடன் இருக்கிறது. பென் ஸ்டோன்ஸ் அணியில் இருந்து மிகவும் வலுவான அணியாக தோன்றும் என்று கூறினார்.

மேலும் அவர், ஸ்டீவ் ஸ்மித் தொடக்க வீரராக களம் இறங்குவது எனக்கு பிடித்திருக்கிறது. சிறந்த வீரர்களுக்கு அதிகமாக பந்துகள் சந்திக்க வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நம்புகிறவன் நான். என்னை பொறுத்த வரைக்கும் பட்லர், ஸ்மித், சஞ்சு சாம்சன் முதல் மூன்று இடங்களில் களம் இறங்குவது சரியானதே என்று தெரிவித்தார்.

Tags :
|