Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • யார் இறுதி போட்டிக்கு செல்வார்கள்; இன்று டெல்லி- ஐதராபாத் அணிகள் மோதல்

யார் இறுதி போட்டிக்கு செல்வார்கள்; இன்று டெல்லி- ஐதராபாத் அணிகள் மோதல்

By: Nagaraj Sun, 08 Nov 2020 10:12:34 AM

யார் இறுதி போட்டிக்கு செல்வார்கள்; இன்று டெல்லி- ஐதராபாத் அணிகள் மோதல்

இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. குவாலிபையர் 2- போட்டியில் டெல்லி - ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மும்பை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதில் இன்று நடைபெறும் குவாலிபையர் 2 ஆட்டத்தில் டெல்லி ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி வரும் 10-ந் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் மும்பை அணியுடன் மோதுவுள்ளது. லீக் சுற்று முடிவில் 8 வெற்றிகளுடன் 2-வது இடத்தை பெற்ற டெல்லி அணி இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் 57 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சிடம் படுதோல்வி அடைந்தது.

delhi,hyderabad teams,clash today,ipl,match ,டெல்லி, ஐதராபாத் அணிகள், இன்று மோதல், ஐ.பி.எல்., போட்டி

இருப்பினும் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு கிடைக்கும். தொடரின் தொடக்கத்தில் வீறுநடை போட்ட டெல்லி இப்போது தடுமாறுகிறது. சமீபத்திய ஆட்டங்களில் தொடக்கம் மோசமாக அமைந்துள்ளது. ஷிகர் தவான், ரஹானே, கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட், ஸ்டோனிஸ் உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் தங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.

பந்து வீச்சில் முந்தைய ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தவிர காஜிசோ ரபடா அன்ரிச் நோர்டியா உள்ளிட்டோர் ரன்களை வாரி வழங்கினர். அவர்களும் அதற்கு பரிகாரம் தேட வேண்டி நெருக்கடியில் உள்ளனர்.

ஐதராபாத் அணி கடைசி 4 ஆட்டங்களில் வரிசையாக வெற்றிகளை குவித்த ஐதராபாத் அணிக்கு பந்து வீச்சே பிரதான பலமாகும். சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான், வேகப்பந்து வீச்சாளர்கள் சந்தீப் ஷர்மா, டி.நடராஜன், ஜாசன் ஹோல்டர் ஆகியோர் கட்டுக்கோப்புடன் பந்து வீசி அசத்துகிறார்கள்.

பேட்டிங்கில் கேப்டன் டேவிட் வார்னர் , வில்லியம்சன், மனிஷ் பாண்டே நம்பிக்கை நட்சத்திரங்களாக மின்னுகிறார்கள். இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் கடந்த ஆட்டத்தில் ஆடாத விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா இன்றைய ஆட்டத்திலும் விளையாட வாய்ப்பில்லை என்று தெரிகிறது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

Tags :
|
|