Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • பிளேஆப் சுற்றுக்கு முன்னேறப்போவது கொல்கத்தா நைட் ரைடர்சா? சன்ரைசர்ஸ் ஐதராபாத்தா?

பிளேஆப் சுற்றுக்கு முன்னேறப்போவது கொல்கத்தா நைட் ரைடர்சா? சன்ரைசர்ஸ் ஐதராபாத்தா?

By: Karunakaran Tue, 03 Nov 2020 5:54:10 PM

பிளேஆப் சுற்றுக்கு முன்னேறப்போவது கொல்கத்தா நைட் ரைடர்சா? சன்ரைசர்ஸ் ஐதராபாத்தா?

13-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்றுடன் லீக் ஆட்டங்கள் முடிகிறது. இந்தப் போட்டியில் நடப்புச் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் முதல் அணியாக பிளேஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றது. நேற்றைய போட்டி முடிவு மூலம் டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகியவை பிளேஆப் சுற்றுக்கு முன்னேறின. சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் ஏற்கனவே வாய்ப்பை இழந்துவிட்டன.

இந்நிலையில் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறும் 4-வது அணி கொல்கத்தா நைட் ரைடர்சா? சன்ரைசர்ஸ் ஐதராபாத்தா? என்பது இன்றைய ஆட்டத்தின் முடிவில் தெரியவரும். இன்று இரவு சார்ஜாவில் நடைபெறும் 56-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் மும்பை அணி வெற்றி பெற்றால் அதாவது ஐதராபாத் தோற்றால் கொல்கத்தா பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறும். ஐதராபாத் வெற்றி பெற்றால் அந்த அணியும், கொல்கத்தாவும் 14 புள்ளிகளுடன் சமநிலை பெறும்.

kolkata knight riders,playoff,sunrisers hyderabad,ipl 2020 ,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பிளேஆஃப், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ஐபிஎல் 2020

ஐதராபாத்தின் நிகர ரன் ரேட் +0.55 ஆக இருக்கிறது. கொல்கத்தாவின் ரன் ரேட் -0.21 ஆக உள்ளது. இதனால் ஐதராபாத் வெற்றி பெற்றாலே பிளே ஆப் சுற்றுக்கு நுழைந்து விடும். இதனால் அந்த அணி வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள். மும்பை அணி 9 வெற்றி, 4 தோல்வியுடன் 18 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. அந்த அணி தனது ஆதிக்கத்தை நீட்டித்துக் கொள்ளும் வேட்கையில் உள்ளது.

மும்பை அணி ஐதராபாத்தை வீழ்த்தியுள்ளதால் நம்பிக்கையுடன் விளையாடும். மும்பை அணியில் இஷான் கிஷன், குயின்டன் டிகாக், ஹர்திக்பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், தற்காலிக கேப்டன் போலார்ட், பும்ரா, போல்ட் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். ஐதராபாத் அணி மும்பை அணிக்கு பதிலடி கொடுத்து வெற்றிபெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணியிலும் சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். மிகவும் முக்கியமான ஆட்டம் என்பதால் ஐதராபாத் அணி முழுத்திறனை வெளிப்படுத்தும்.

Tags :