Advertisement

சுற்றுலா பயணிகளை அதிகளவில் கவரும் 2 வினோத கடல்கள்!

By: Monisha Thu, 05 Nov 2020 1:38:38 PM

சுற்றுலா பயணிகளை அதிகளவில் கவரும் 2 வினோத கடல்கள்!

கடல்கள் பொதுவாக நீல நிறத்திலும், கடல் நீர் உப்பு சுவையுடனும் தான் காணப்படும். ஆனால் இந்த உலகில் உள்ள சில கடல்கள் இவற்றிலிருந்து மாறுபட்டதாகவும், வித்தியாசமான தோற்றத்திலும், ஆச்சரியப்படத்தக்கதாகவும் உள்ளது. அப்படிப்பட்ட 2 வினோத கடல்களை தெரிந்து கொள்வோம்.

ஹாட் வாட்டர் பீச்
குளிர்காலத்தில் வெதுவெதுப்பான நீரில் குளிக்க நம்மில் பெரும்பாலானோர் விரும்புவோம். இந்த வெதுவெதுப்பான நீரில் குளிக்க ஆண்டுதோறும் 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இங்கு வருகின்றனர்.

hot water beach,green beach,tourism,seas,surprise ,ஹாட் வாட்டர் பீச்,பசுமை கடற்கரை,சுற்றுலா,கடல்கள்,ஆச்சரியம்

இங்குள்ள கடற்கரையை சிறிதளவு தோண்டினால் போதும். நிலத்தடியில் உள்ள சூடான நீரூற்று கடல் மண் வழியாக இதமான வெப்ப நிலையுடன் மேற்பரப்பை வந்தடையும். அப்படியொரு அழகிய கடற்கரைதான் நியூசிலாந்தில் வெனின்சுலா எனும் இடத்தில உள்ள இந்த ஹாட் வாட்டர் பீச். அப்படிப்பட்ட வெதுவெதுப்பான நீர் இயற்கையாகவே கிடைத்தால் எப்படி இருக்கும்.

hot water beach,green beach,tourism,seas,surprise ,ஹாட் வாட்டர் பீச்,பசுமை கடற்கரை,சுற்றுலா,கடல்கள்,ஆச்சரியம்

பசுமை கடற்கரை
ஹவாய் தீவில் உள்ளது 'பப்பாகோலியா கடற்கரை'. இந்த கடற்கரை மணல்கள் பச்சை நிறத்தில் உள்ளது. உலகிலேயே கடல் மண் பச்சை நிறத்தில் காணப்படுவது இந்த கடற்கரையில் மட்டும்தான். இதனாலேயே இதற்கு 'பசுமை கடற்கரை' என பெயர் வந்தது. முதலில் இந்த கடற்கரை பார்ப்பதற்கு முழுவதும் ஏதோ கடற்பாசி சூழப்பட்டது போல் தோற்றமளிக்கும்.

இந்த நிற மாற்றத்திற்கு உண்மை காரணம் இங்குள்ள எரிமலையிலிருந்து வெளிவரும் 'கோலூபின்' எனப்படும் பச்சை நிற கனிமங்கள் தான். இந்த கடற்கரைக்கு 'க்ரீன் பீச்' என்ற மற்றொரு பெயரும் உண்டு.

Tags :
|