Advertisement

  • வீடு
  • சுற்றுலா
  • சரித்திரச் சிறப்பு வாய்ந்த பேக்கல் கோட்டைக்கு ஒரு பயணம் போகலாமா?

சரித்திரச் சிறப்பு வாய்ந்த பேக்கல் கோட்டைக்கு ஒரு பயணம் போகலாமா?

By: Monisha Sun, 20 Dec 2020 6:39:17 PM

சரித்திரச் சிறப்பு வாய்ந்த பேக்கல் கோட்டைக்கு ஒரு பயணம் போகலாமா?

கேரளாவின் காசர்கோட் மாவட்டத்தில் உள்ள சிறிய நகரம் பேக்கல். இங்கு அமைதியின் இருப்பிடமாய் பள்ளிக்கரா பகுதியில் அரபிக் கடலின் கரையோரம் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது. இந்த நகரில் வலியகுளம் என்ற பெயரில் முன்னொரு காலத்தில் மிகப்பெரிய அரண்மனை ஒன்று இருந்தது. இதன் காரணமாகவே பெரிய அரண்மனை என்ற பொருளில் இந்த நகருக்கு பேக்கல் என்று பெயர் வந்தது.

பேக்கல் நகரம் அதன் விருந்தோம்பல் பண்புக்காக பயணிகளிடையே மிகவும் பிரபலம். அதுவும் இங்கு உள்ளூர்வாசிகளால் தயார் செய்யப்படும் 'பாயசம்' என்றும் நம் அடி நாக்கில் தித்தித்துக்கொண்டே இருக்கும். பேக்கல் நகரில் உள்ள கோயில்கள் பல்வேறு குடும்பங்களுக்கு சொந்தமானவை. இந்தக் கோயில்களுக்கு நீங்கள் ஆண்டின் தொடக்கத்திலேயே வந்தால் இப்பகுதிகளில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் தெய்யம் திருவிழாவில் கலந்து கொள்ளலாம்.

kerala,bekal,arabian sea,palace,festival ,கேரளா,பேக்கல்,அரபிக் கடல்,அரண்மனை,திருவிழா

பேக்கல் நகரின் வரலாற்றுப் பெருமைக்கு மூல முதல் காரணமாக பேக்கல் கோட்டை விளங்கி வருகிறது. அதுவும் பிரம்மாண்ட அரபிக் கடலின் நீல நீர் பிரவாகத்தின் பின்னணியில் காண்போரை மயக்கும் கொள்ள செய்யும் பேரழகு படைத்தது இந்தக் கோட்டை.

இந்த சரித்திரச் சிறப்பு வாய்ந்த கோட்டை இந்திய தொல்பொருள் துறையினரால் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதோடு பேக்கல் கோட்டையின் உள்ளேயே அமைந்திருக்கும் விருந்தினர் மாளிகை கேரள பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் ஹனுமான் கோயிலும், திப்பு சுல்தான் கட்டிய பழைய மசூதியும் பேக்கல் நகரின் இதர முக்கிய சுற்றுலா அம்சங்களாக அறியப்படுகின்றன.

Tags :
|
|
|