Advertisement

பேய் இடங்களுக்கு பெயர் பெற்ற லக்னோ

By: Karunakaran Tue, 30 June 2020 3:37:28 PM

பேய் இடங்களுக்கு பெயர் பெற்ற லக்னோ

நவாப்களின் நகரமாக லக்னோ விளங்குகிறது. ஆனால் புகழ் வாய்ந்த இந்த லக்னோவில் பல அப்பாவி மக்களின் மரணங்களும் நடந்துள்ளன. இங்கு நிறைய பேய் இடங்கள் இருப்பதற்கு முக்கிய காரணங்களாக இந்த மரணங்கள் அமைந்துள்ளன. நமது நம்பிக்கையை மாற்றிக் கொள்ளக்கூடிய அளவிற்கு இந்த இடங்கள் அமைந்துள்ளன.

ஓஇஎல் (OEL) ஹவுஸ்:
தற்போது லக்னோ பல்கலைக்கழக துணைவேந்தரின் இல்லமான ஓ.இ.எல் ஹவுஸ் ஒரு காலத்தில் நவாப் வாஜித் அலி ஷாவின் இல்லமாக இருந்தது. 1857 ஆம் ஆண்டு போரின் போது, ஏராளமான பிரிட்டிஷ் வீரர்கள் கொல்லப்பட்டு அந்த வீட்டிற்குள் இருந்த கிணற்றில் வீசப்பட்டனர். இதனால் அந்த கிணற்றில் ஆவிகள் உள்ளதாக மக்கள் நம்புகின்றனர். மேலும், அந்த கிணற்றின் அருகே ஒரு சிறுவன் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவத்தினாலும், அந்த இடத்தில் பேய் இருக்கிறது என முழுமையாக நம்புகின்றனர்.

lucknow,haunted places,oel house,para imambara ,லக்னோ, பேய் இடங்கள், ஓஇஎல் வீடு, பாரா இமாம்பரா

பாரா இமாம்பரா :
பூல்புலையா என இப்பகுதி அழைக்கப்படுகிறது. வழிகாட்டி இல்லாமல் ஒரு முறை கூட செல்லமுடியாது. ஏனென்றால் இந்த கட்டடக்கலை அற்புதத்திற்குள் இருக்கும் வினோதமான பிரமைகள் மிகவும் பயமுறுத்துவதாய் அமைந்திருக்கும். ஒரு நபர் பிரமைகளுக்குள் தொலைந்து போனால், அதற்கான வழியைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமான ஒன்றாகும்.

இந்த கட்டிடத்தின் உள்ளே இருந்த தெஹானா ஒரு காலத்தில் சிறைச்சாலையாக இயங்கியது. அங்கு பிரிட்டிஷ்காரர்கள் இந்திய ஆண்களை சிறைபிடித்து வைத்திருந்தனர். உண்மையில், வளாகத்திற்குள் விவரிக்க முடியாத படங்கள் பல உள்ளன. அங்கு செல்லும் போது உங்களுக்கு வித்தியாசமான பிரமைகள் கூட ஏற்படும். அந்த அளவிற்கு அவை அமைந்துள்ளன.

lucknow,haunted places,oel house,para imambara ,லக்னோ, பேய் இடங்கள், ஓஇஎல் வீடு, பாரா இமாம்பரா

சிக்கந்தர் பாக் :
லக்னோவில் மிகவும் பிரபலமான நகரமாக சிக்கந்தர் பாக் உள்ளது. 1857 ஆம் ஆண்டு சுதந்திரத்திற்காக நடந்த போரிற்குப் பின், அந்த பகுதி பேய்கள் நிறைந்த பகுதியாக மாறியது. ஆயிரக்கணக்கான இந்திய ஆண்கள் பிரிட்டிஷ் காவலர்களால் கொடூரமாக சொல்லப்பட்டதாக அரசு ஆவணங்கள் தெரிவித்துள்ளன.

அவ்வாறு இறந்தவர்களுக்கு இறுதி சடங்கிற்குக் கூட அனுமதிக்காமல் சடலங்களை அங்கேயே வீசி சென்றதால், அவற்றைக் கழுகுகள் தின்றன. இதனால் மனிதர்களின் ஆவிகள் சிக்கந்தர் பாக் வளாகத்தை வேட்டையாடுவதாக அங்குள்ள மக்கள் நம்புகின்றனர். அங்கு வித்தியாசமான சத்தங்களும் அழுகை சத்தங்களும் வருவதாகவும், சூரிய மறைவிற்குப் பிறகு யாரும் அங்கு செல்வதில்லை எனவும், இரவு நேரங்களில் வழக்கத்திற்கு மாறாக அதிகப்படியான குளிராக அந்த இடம் மாறிவிடுவதாகவும் அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

lucknow,haunted places,oel house,para imambara ,லக்னோ, பேய் இடங்கள், ஓஇஎல் வீடு, பாரா இமாம்பரா

பால்ராம்பூர் மருத்துவமனை :
இந்த மருத்துவமனை பிரிட்டிஷ் வீரர்களால் கல்லறையின் மீது கட்டப்பட்டது. இந்த மருத்துவமனைக்குள் நீங்கள் சென்றால், அங்குள்ள சில கல்லறைகளை நீங்கள் இன்றும் கவனிக்கலாம். இந்த மருத்துவமனையில் பல பயங்கரமான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இங்கிருந்த நோயாளிகள் மருத்துவமனையின் உள்ளே எதிர்மறையை உணர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். சில நோயாளிகள் ஜன்னல்களில் அசாதாரண காட்சிகளைக் கண்டதாகக் கூறுகின்றனர். இந்த மருத்துவமனையைப் பார்த்தால் குளிர்ச்சி தரும். ஆனால் உள்ளே சென்றால் பல மர்ம பயங்களை உண்டாக்கும்.

Tags :