Advertisement

  • வீடு
  • சுற்றுலா
  • வருடம் முழுவதும் சுற்றுலா செல்ல ஏற்ற இடமாக விளங்கும் பொள்ளாச்சி!

வருடம் முழுவதும் சுற்றுலா செல்ல ஏற்ற இடமாக விளங்கும் பொள்ளாச்சி!

By: Monisha Mon, 05 Oct 2020 1:32:18 PM

வருடம் முழுவதும் சுற்றுலா செல்ல ஏற்ற இடமாக விளங்கும் பொள்ளாச்சி!

தென்னிந்திய மாநிலமான தமிழகத்தின் கோயம்புத்தூரில் அமைந்துள்ள ஊர் பொள்ளாச்சி. இவ்வூர், அம்மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும். பொள்ளாச்சி, மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அருகில் அமைந்துள்ளதால், இங்கு வருடந்தோறும் வானிலை ரம்மியமாக இருப்பதுடன், மனம் விட்டு ரசிக்கத்தக்க இயற்கை அழகுடனும் திகழ்கிறது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த நகரம், சினிமாத்துறையினர் மிகவும் விரும்பும் ஒரு இடமாக உள்ளது. கடந்த சில வருடங்களில் மட்டும் சுமார் 1500 திரைப்படங்கள் இங்கே எடுக்கப்பட்டுள்ளன.

பொள்ளாச்சி மற்றும் அதன் அருகில் உள்ள சுற்றுலா தலங்கள்
சுப்ரமண்யர் திருக்கோயில், பொள்ளாச்சியின் மிகப் பிரபலமான ஒரு சுற்றுலாத் தலமாகும். பொள்ளாச்சியின் வெல்லச் சந்தை தான் ஆசியாவிலேயே மிகப் பெரிய வெல்லச் சந்தையாகும். இங்கு உள்ள காய்கறிச் சந்தை, கேரளாவின் மத்தியப் பகுதிகளுக்கு, காய்கறி விநியோகம் செய்யும் பெரிய சந்தைகளுள் ஒன்றாக விளங்குகிறது. அதே போல், தென்னிந்தியாவின் மிகப்பெரும் இரும்பு மற்றும் கால்நடைச் சந்தைகள் இங்கு அமையப்பெற்றுள்ளன.

coimbatore,pollachi,tourism,market,dams ,கோயம்புத்தூர்,பொள்ளாச்சி,சுற்றுலா,சந்தை,அணைக்கட்டுகள்

இச்சந்தைகள் போக, சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் பல அணைக்கட்டுகள் இங்கு உள்ளன. நீரார் அணை, ஆழியார் அணை, மீன்கார அணை, சோழியார் அணை, பெருவரிப்பள்ளம் அணை ஆகியன இங்குள்ள சில பிரபலமான அணைக்கட்டுகளாகும்.

இந்நகரில், ராமலிங்க சௌடேஷ்வரி அம்மன் கோயில், சுப்ரமண்யஸ்வாமி கோயில், மாசாணி அம்மன் திருக்கோயில், அழகுநாச்சி அம்மன் கோயில், திருமூர்த்தி கோயில், சூலக்கல் மாரியம்மன் திருக்கோயில், ஸ்ரீ வேலாயுதஸ்வாமி திருக்கோயில், ஈச்சநாரி விநாயகர் திருக்கோயில், அம்பரம்பாளையம் தர்க்கா மற்றும் அருள்மிகு பிரசாந்த விநாயகர் கோயில், போன்ற பல கோயில்களைக் காணலாம்.

இந்நகர், ஆழியார் சித்தாஷ்ரமம், ஆனைமலை வனவிலங்கு சரணாலையம், டாப் ஸ்லிப், வால்பாறை, மாசாணியம்மன் கோயில், அமராவதி அணை மற்றும் முதலை பூங்கா ஆகிய பல இடங்களுக்கு அருகாமையில் அமைந்துள்ளது.

coimbatore,pollachi,tourism,market,dams ,கோயம்புத்தூர்,பொள்ளாச்சி,சுற்றுலா,சந்தை,அணைக்கட்டுகள்

பொள்ளாச்சிக்கு செல்வது எப்படி?
கோயம்புத்தூர் விமான நிலையம் பொள்ளாச்சிக்கு மிக அருகில் அமைந்துள்ளது. முக்கியமான, அனைத்து இந்திய, தென்னாசிய, மற்றும் வளைகுடா நகரங்களுக்கும், இங்கிருந்து, உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் உள்ளன. பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து, அருகில் உள்ள ஊர்களுக்கு, பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோயம்புத்தூர் இரயில் நிலையமே, இவ்வூருக்கு மிக அருகில் அமைந்துள்ள இரயில் நிலையமாகும்.

பொள்ளாச்சியின் வானிலை
பொள்ளாச்சியில் வருடந்தோறும் மிதமான, ரம்மியமான வானிலையே நிலவுகிறது. சுற்றுலா செல்வதற்கு, வருடம் முழுவதும் ஏற்ற இடமாக இருப்பினும், மிகவும் இனிய வானிலை நிலவக்கூடிய மழைக்காலம் மற்றும் குளிர்காலங்களில், இந்நகரம், மிகுந்த பொலிவுடன் காணப்படும்.

Tags :
|