Advertisement

  • வீடு
  • சுற்றுலா
  • நம் நாட்டில் குறைந்த செலவில் ஹனிமூன் செல்ல சில இடங்கள்!

நம் நாட்டில் குறைந்த செலவில் ஹனிமூன் செல்ல சில இடங்கள்!

By: Monisha Tue, 22 Dec 2020 4:34:53 PM

நம் நாட்டில் குறைந்த செலவில் ஹனிமூன் செல்ல சில இடங்கள்!

திருமணம் என்பது மனித வாழ்வில் மிக முக்கியம் என்றாலும் திருமண கொண்டாட்டத்திற்குப் பிறகு நீங்கள் சோர்ந்து போயிருப்பீர்கள். எனவே திருமண கொண்டாட்டத்திற்கு பிறகு ஹனிமூன் பிரேக் அவசியம்தான். ஆனாலும் அதிலும் நீங்கள் திட்டமிட வேண்டியது முக்கியம். உங்கள் ஹனிமூன் எங்கே இருக்க வேண்டும் எப்படி உங்கள் பயணம் அமைய வேண்டும் மலைகள் சூழ்ந்த பகுதியை கடற்கரை பகுதியா வெளிநாட்டு பயணமா எல்லாவற்றையும் நீங்கள் முடிவு செய்ய வேண்டும். இந்த பதிவில் நம் இந்திய நாட்டில் பட்ஜெட்டிற்குள் ஹனிமூன் செல்ல சில இடங்களை பார்ப்போம்.

சிம்லா
மலைகளின் ராணி. ஹனிமூன் செல்பவர்களின் சொர்க்கம். இதெல்லாம் ஷிம்லாவிற்கானது. பரபரப்பான நகர வாழ்க்கையில் இருந்து விலகி ஒரு பேரமைதிக்கு நம்மை அழைத்து செல்லும் இடம்தான் சிம்லா. இங்கே கோடையை மட்டுமல்ல குளிர்காலத்தையும் காதல் துணையோடு சுகமாகக் கழிக்கலாம். ஓவியம் வரைந்தது போன்ற இதன் பசுமை உங்கள் இருவரையுமே மறந்து ஒன்றிணைக்கும்.

honeymoon,tourism,budget,mountainous area,beach area ,ஹனிமூன்,சுற்றுலா,பட்ஜெட்,மலைகள் சூழ்ந்த பகுதி,கடற்கரை பகுதி

ராஜஸ்தான்
விழாக்காலங்களில் வண்ணமயமானது இந்த ஊர். ஹோலி மற்றும் யானை திருவிழா கொண்டாடப்படும் நாட்களில் ராஜஸ்தான் தேவலோகமாக இருக்கும். பகலில் சிறிது வெதுவெதுப்பாக இருந்தாலும் இரவுகளில் ராஜஸ்தான் அலாதியான சொர்க்கம்தான்.

கோவளம்
இந்தக் கடற்கரையில் கேரளாவின் உப்பங்கழி அழகை கண்டு மகிழலாம். அற்புதமான அஸ்தமன நேரங்களில் உங்கள் துணையுடன் ஒரு கடற்கரையில் நடப்பது உங்கள் திருமண பந்தத்தின் ஆயுளைக் கூட்டும். ஒரு ஆடம்பர இடத்தை புக் செய்து காதல்மழையில் நனையுங்கள்.

ஆக்ரா
காதலுக்காக மாளிகை கட்டிய இடத்தில உங்கள் ஹனிமூன் எத்தனை பொருத்தமாக இருக்கும் தெரியுமா
முகலாயர்களின் கட்டிடக் கலை அழகை நீங்கள் மூன்று நாட்களில் கண்டு களிக்கலாம். அதிக நேரம் ஒன்றாக இருக்க வேண்டியதில்லை எனும் எண்ணம் கொண்டவர்கள் ஆக்ராவை தேர்ந்தெடுக்கலாம். நிலவின் ஒளியில் தாஜ்மஹாலை உங்கள் துணையின் கைகளை பிடித்தபடி பாருங்கள். உங்கள் காதல் வாழ்க்கை அங்கிருந்து தொடங்கட்டும்.

honeymoon,tourism,budget,mountainous area,beach area ,ஹனிமூன்,சுற்றுலா,பட்ஜெட்,மலைகள் சூழ்ந்த பகுதி,கடற்கரை பகுதி

கோவா
கோவாவில் இருக்கும் சிறப்பம்சமே எப்படிப்பட்ட ஆளாக இருந்தாலும் உங்களுக்கு அங்கே ஒரு இடம் இருக்கும். பட்ஜெட்டா ஆடம்பரமா இரண்டுமே இங்கே இருக்கும். கடற்கரையோரம் உங்கள் துணையோடு இருந்து அஸ்தமனத்தை கொண்டாடுங்கள்.

பாண்டிச்சேரி
பிரெஞ்சு காலனி அதிகம் உள்ள இந்த ஊர் உங்களை உள்ளூருக்குள்ளேயே வெளிநாட்டில் இருப்பது போன்ற ஒரு உணர்வை தரும். கற்கள் கொண்ட கடற்கரையும் வண்ணமயமான வீதிகளும் உங்களை உற்சாகப்படுத்தும். சென்னையில் இருந்து சென்றால் மிக பக்கம். சைக்கிள் அல்லது ஸ்கூட்டி யில் இந்த ஊரை சுற்றி வந்தால் ஊரின் அழகு புரியும்.

டல்ஹவுசி
இந்த சிறிய ஸ்விட்சர்லாந்து உங்கள் மனதை மொத்தமாக கொள்ளையோ கொள்ளும். பைன் மரங்கள் நிறைந்த இந்த இடம் கோடை விடுமுறைக்கு ஏற்றது. பச்சை பசேல் என்கிற மலைகளும் காலனி வடிவத்தில் உள்ள கட்டிடங்களும் உங்கள் அன்பை அழகாக்கும்.

Tags :
|