Advertisement

  • வீடு
  • சுற்றுலா
  • ஆன்மிக சுற்றுலா மீது ஆர்வமா? கடற்கரை அருகில் உள்ள தமிழ்நாடு கோவில்கள்!

ஆன்மிக சுற்றுலா மீது ஆர்வமா? கடற்கரை அருகில் உள்ள தமிழ்நாடு கோவில்கள்!

By: Sonia Tue, 27 Oct 2020 10:46 AM

ஆன்மிக சுற்றுலா மீது ஆர்வமா? கடற்கரை அருகில் உள்ள தமிழ்நாடு கோவில்கள்!

உலகம் முழுவதும் நம்முடைய தமிழ்நாடு கோவில்கள் மிகவும் புகழ்பெற்று வருகிறது. இந்தியாவிலேயே கோவில்கள் அதிகமாக காணப்படுவது நமது தமிழ்நாட்டில். ஆதிகாலம் முதலே உள்ள பல முக்கிய சக்தி வாய்ந்த சிறப்பு வாய்ந்த பல கோவில்கள் தமிழ்நாட்டில் உள்ளது. நிலப்பகுதிகளில் மட்டுமல்லாது கடற்கரைகள் பக்கத்திலும் பல சிறப்புக்கு வாய்ந்த கோவில்கள் உள்ளது அப்படி கடற்கரை அருகில் உள்ள தமிழ்நாடு கோவில்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

மாமல்லபுரம் என்றாலே கடற்கரை கோவிலே அடையாளப்படுத்தப்படுகிறது. இவ்விடம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னைக்கு அருகில் அமைந்துள்ளது. இக்கோவில் இரண்டாம் நரசிம்ம பல்லவ மன்னனால் கட்டப்பட்டது. இக்கோவிலின் விமானம் 60 அடி உயரம் உடையது. இக்கோவிலில் சிவபெருமான், உமையம்மை, குமரக்டவுள், விநாயகப் பெருமான் ஆகியோர் உள்ளனர்.

beach,tamil nadu,temples,spiritual tourism ,கடற்கரை,தமிழ்நாடு,கோவில்கள்,ஆன்மிக சுற்றுலா

குமரிஅம்மன் கோவில் முக்கடல்கள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமமான கன்னியாகுமரியில் அமைந்துள்ளது. இவ்விடம் தாட்சாயணியின் முதுகுப் பகுதி விழுந்த இடமாகக் கருதப்பட்டு சக்தி பீடங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இங்குள்ள அன்னை துர்க்காதேவி, பகவதி, பாலசவுந்தரி, தியாகசவுந்தரி என்றெல்லாம் போற்றப்படுகிறாள்.

சுயம்புலிங்க சுவாமி கோவிலானது திருநெல்வேலி மாவட்டத்தில் திருச்செந்தூர் கன்னியாகுமரி சாலையில் திருச்செந்தூரிலிருந்து 35கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு இறைவன் சுயம்புவாகத் தோன்றியதால் சுயம்புலிங்கம் என்ற பெயரிலும், அம்மை பிரம்மசக்தியம்மன் என்ற பெயரிலும் அருள்புரிகின்றனர்.

beach,tamil nadu,temples,spiritual tourism ,கடற்கரை,தமிழ்நாடு,கோவில்கள்,ஆன்மிக சுற்றுலா

சுப்பிரமணியசுவாமி கோவிலானது தூத்துக்குடி மாவட்டத்தில் வங்காள விரிகுடாக் கடலை ஒட்டி அமைந்துள்ளது. இவ்விடம் அறுபடைவீடுகளில் இரண்டாவது படைவீடாகும்.

இராமநாதர் ஆலயம் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமேஸ்வரம் என்னும் ஊரில் வங்காள விரிகுடா கடற்கரையோரம் அமைந்துள்ளது.

மருந்தீஸ்வரர் கோவிலானது சென்னையில் திருவான்மியூரில் அமைந்துள்ளது. இங்கு இறைவன் மருந்தீஸ்வரர், ஒளசதநாதர், பால்வண்ணநாதர் என்ற திருப்பெயரிலும், அம்மை திரிபுரசுந்தரி, சொக்கநாயகி என்ற திருப்பெயர்களிலும் அருள்புரிகின்றனர். இத்தலம் 2000 வருடங்கள் பழமையானது ஆகும்.

Tags :
|