Advertisement

  • வீடு
  • சுற்றுலா
  • இப்பத்தான் திருமணம் முடிந்ததா? ஹனிமூன் செல்ல சிறந்த இடம் உங்களுக்காக!

இப்பத்தான் திருமணம் முடிந்ததா? ஹனிமூன் செல்ல சிறந்த இடம் உங்களுக்காக!

By: Sonia Wed, 30 Dec 2020 1:46 PM

இப்பத்தான் திருமணம் முடிந்ததா? ஹனிமூன் செல்ல சிறந்த இடம் உங்களுக்காக!

உங்கள் வாழ்கைத்துணையோடு வெளிநாட்டிற்கு ஹனிமூன் செல்ல விரும்பும் உங்களுக்காக சில அழகிய ஆடம்பர இடங்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஏதேனும் ஒரு பகுதியை தேர்வு செய்து உங்கள் இல் வாழ்க்கையை இனிமையாக தொடங்குங்கள்!

ஆஸ்திரேலியா
உலகின் பாதி நாடுகள் குளிரில் உறைந்திருக்கும் சமயம் ஆஸ்திரேலியா சூரியனும் வெளிச்சமும் கொண்டு அற்புதமாக இருக்கும். இங்குள்ள வானிலை 23 டிகிரி இருக்கும். கடற்கரை மலை சரித்திரம் கலாச்சாரம் எனப் பல விஷயங்கள் இங்கு சுவாரஸ்யமானவை. சிட்னியின் இரவு வாழ்க்கை உங்களை அற்புதமாக உணர வைக்கும்.

சவுத் ஆப்பிரிக்கா
மழைக்கு பின்னால் மார்ச் மாதம் இங்கு செல்வது நல்லது. நாடே பசுமையாக இருக்கும் அதுமட்டுமல்ல வலசை பறவைகளை நீங்கள் தரிசிக்கலாம். இயற்கை நேசிப்பாளர்களுக்கு ஏற்ற ஹனிமூன் இடம்.

australia,south africa,maldives,honeymoon,luxury places ,ஆஸ்திரேலியா,சவுத் ஆப்பிரிக்கா,மாலத்தீவு,ஹனிமூன்,ஆடம்பர இடங்கள்

மாலத்தீவுகள்
உங்களுக்கு கடல் பிடிக்கும் என்றால் உங்கள் துணையுடன் கடற்கரையில் செலவிட இதுதான் சரியான இடம். இங்கு 27 டிகிரி வெப்பம் இருக்கும். சிறிய பட்ஜெட் முதல் பெரிய பட்ஜெட்வரை தங்குமிடங்கள் உண்டு.

நியூசிலாந்து
ஏப்ரல் மாதம் இலையுதிர்காலம் என்பதால் இங்கு செல்லலாம். இங்கு மலைகள் சிறப்பாக இருக்கும். தண்ணீர் விளையாட்டுக்கள் இங்கு பிரசித்தமானவை. மலைகளும் பள்ளத்தாக்குகளும் தெளிவான வானமும் இந்த நாட்டின் சிறப்புகள்.

பிரான்ஸ்
உலகின் ரொமான்டிக் நகரம் பாரிஸ். ஹனிமூனுக்கு கோடையில் இங்கு செல்வது நல்லது. அதிக கூட்டம் இருக்காது. காதல் நகரத்தில் ஈபிள் டவர் முன்பு உங்கள் காதல் வாழ்க்கையை ஆரம்பியுங்கள்.

australia,south africa,maldives,honeymoon,luxury places ,ஆஸ்திரேலியா,சவுத் ஆப்பிரிக்கா,மாலத்தீவு,ஹனிமூன்,ஆடம்பர இடங்கள்

ஜப்பான்
டோக்கியோவில் 23 டிகிரி வெப்பம் நிலவுவதோடு, பூக்கள் போது குலுங்கும் மாதம் மே. மலைகள் பசுமை போர்த்தியிருக்கும். இந்த காலத்தில் நீங்கள் ஹனிமூன் கொண்டாடுங்கள். வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்களாக இவை நிலைக்கும்.

துபாய்
சுட்டெரிக்கும் சூரியன் கொஞ்சம் ஓய்வெடுக்கும் மாதமான அக்டோபர் மாதத்தில் நீங்கள் இங்கு ஹனிமூனுக்கு செல்லலாம். அங்கு நல்ல ஆடம்பர ஹோட்டலில் தங்கி அங்குள்ள பொழுதுபோக்குகளை கண்டு மகிழுங்கள்.

சிங்கப்பூர்
ஆடம்பர நகர வாழ்க்கைக்கு சிங்கப்பூர் தான் சிறந்த உதாரணம். இந்தியாவில் இருந்து விமானம் வழியாக சில மணி நேரங்களில் சென்று விடலாம். வார இறுதிகளில் செண்டோசா தீவுகள் உங்களை வரவேற்கும். இதுவும் ஹனிமூன் செல்ல சிறந்த இடமாகும்.

Tags :