Advertisement

  • வீடு
  • சுற்றுலா
  • ஓய்வுச்சுற்றலா வசதிகள் நிறைந்த போர்ட் பிளேர் நகரம்!

ஓய்வுச்சுற்றலா வசதிகள் நிறைந்த போர்ட் பிளேர் நகரம்!

By: Monisha Tue, 29 Sept 2020 1:21:54 PM

ஓய்வுச்சுற்றலா வசதிகள் நிறைந்த போர்ட் பிளேர் நகரம்!

அந்தமான்-நிகோபார் யூனியன் பிரதேசத்தின் தலைநகரமான இந்த போர்ட் பிளேர் நகரம் தெற்கு அந்தமான் தீவில் அமைந்துள்ளது. இது அந்தமான் தீவுக்கூட்டங்களிலேயே பெரிய தீவாகும்.இந்த தீவின் தென்கோடியில் போர்ட் பிளேர் உள்ளது. வருடமுழுதும் இனிமையான வெப்பப்பிரதேச பருவநிலையை பெற்றுள்ளதோடு போதுமான அளவு மழையையும் இந்த தீவுப்பிரதேசம் பெறுகிறது.

இந்தியர்கள் மட்டுமல்லாது வெளிநாட்டினர்கள் மத்தியிலும் பிரசித்தமாக அறியப்படும் போர்ட் பிளேர் நகரத்தில் சில இடங்கள் இந்தியர் அல்லாதவருக்காகவே ஒதுக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவைப் பொறுத்தவரையில் தேசப்பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான முக்கிய கேந்திரமாக திகழும் இந்நகரத்தில் இந்திய விமானப்படை, கப்பற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படையினரின் செயல்பாடுகள் அதிக அளவில் காணப்படுகின்றன.

port blair,tourism,prison,recreation,ecology ,போர்ட் பிளேர்,சுற்றலா,சிறைச்சாலை,பொழுதுபோக்கு,இயற்கைச்சூழல்

கேளிக்கை அம்சங்கள் நிரம்பிய பல கடற்கரைகளும், ஓய்வுச்சுற்றலா வசதிகளும் இந்நகரத்தில் நிறைந்துள்ளன. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 'காலாபாணி' (கறுப்பு நீர்) சிறைச்சாலை இந்நகரில்தான் அமைந்துள்ளது. இது 1800 வது ஆண்டுகளின் பிற்பகுதியில் இது காலனிய இந்தியாவில் பரவலாக அறியப்பட்டிருந்தது.

1800 வது ஆண்டுகளின் பிற்பகுதியில் ஆங்கிலேயரால் கட்டப்பட்ட இந்த காலாபாணி எனப்படும் 'செல்லுலர்' சிறைச்சாலையானது அக்காலத்தில் இந்திய அரசியல் கைதிகள் மற்றும் சுதந்திரப்போராட்ட வீரர்கள் அடைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட வதைக்கூடமாக பயன்படுத்தப்பட்டதாகும். மிகக்கொடுமையான அநீதிகளும் கொடுமைகளும் கைதிகளுக்கு இழைக்கப்பட்ட வரலாற்றுநிகழ்வின் மௌனசாட்சியாக இச்சிறைச்சாலை இன்றும் வீற்றிருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு 'காலாபாணி' என்றும் 'சிறைச்சாலை' என்றும் வெளியான திரைப்படம் இந்த நிஜ வளாகத்தில் நிஜமான சரித்திர சம்பவங்களோடு எடுக்கப்பட்டது என்பதும குறிப்பிடத்தக்கது.

port blair,tourism,prison,recreation,ecology ,போர்ட் பிளேர்,சுற்றலா,சிறைச்சாலை,பொழுதுபோக்கு,இயற்கைச்சூழல்


இந்த செல்லுலர் சிறைக்கு அருகிலேயே ஒரு நீர் விளையாட்டு வளாகமும் அமைந்துள்ளது. இங்கு படகுப்பாராச்சூட் பறப்பு, வாட்டர் ஸ்கூட்டர், துடுப்புப்படகு, மிதவைப்படகு போன்ற ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ளன. வணிக நோக்குடன் இந்த பொழுதுபோக்கு அம்சங்கள் வழங்கப்பட்டாலும் அந்தமான் தீவுப்பகுதியின் இயற்கைச்சூழலில் இத்தகைய சாகசப்பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபடுவது விசேஷமான அனுபவமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. போர் பிளேர் நகரின் இதமான பருவநிலை இது போன்ற நீர் விளையாட்டுகளுக்கு பொருத்தமாக இருப்பது ஒரு கூடுதல் சிறப்பம்சம்.

போர்ட் பிளேர் நகரத்துக்கு பயணம் மேற்கொள்வதும் சுலபமாகவே உள்ளது. சென்னை, கல்கத்தா மற்றும் புவனேஸ்வர் நகரங்களிலிருந்து போர்ட் பிளேர் வீர சாவர்க்கர் விமான நிலையத்துக்கு தினசரி விமான சேவைகள் உள்ளன. இது தவிர இந்திய கப்பல் துறை நிறுவனம் பலவிதமான சொகுசு பயணக்கப்பல்களையும் போர்ட் பிளேர் நகருக்கு இயக்குகிறது.

Tags :
|