Advertisement

  • வீடு
  • சுற்றுலா
  • பூட்டுக்கு பரபலமான திண்டுக்கல்லை சுற்றியுள்ள சுற்றுலா இடங்கள்!

பூட்டுக்கு பரபலமான திண்டுக்கல்லை சுற்றியுள்ள சுற்றுலா இடங்கள்!

By: Monisha Wed, 14 Oct 2020 2:39:05 PM

பூட்டுக்கு பரபலமான திண்டுக்கல்லை சுற்றியுள்ள சுற்றுலா இடங்கள்!

இந்தியா முழுவதும் பூட்டு என்றாலே அது திண்டுக்கல் என்ற அளவிலே மிகவும் புகழ்பெற்ற நகரமான திண்டுக்கல், தெற்கே மதுரை மாவட்டத்தாலும், மேற்கே திருப்பூர் மற்றும் கேரளாவினாலும் சூழ்ப்பட்டுள்ளது.
பழனி மலை தொடருக்கும் சிறுமலை மலைத்தொடருக்கும் இடையே இந்நகரம் அமைந்துள்ளது மற்றும் விவசாயம் செய்வதற்க்கு ஏற்ற வளமான நிலத்தை பெற்றுள்ளது. திண்டுக்கல் நகரம் பிரியாணி நகரம், பூட்டு நகரம், ஜவுளி மற்றும் தோல்பதனிடும் நகரம் என்ற பல்வேறு பெயர்களில் பிரபலமானது.

திண்டுக்கல்லை சுற்றியுள்ள சுற்றுலா இடங்கள்
கம்பீரமான கோட்டையை தவிர, திண்டுக்கல் பகுதியில் சில கோயில்களும், புனித நதிகளும் பார்க்ககூடிய இடங்கள். திண்டுக்கல்லில் இருந்து 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பஞ்சம்பட்டி முக்கியமாக பார்க்க வேண்டிய இடம். அதோடு 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு ரோமன் கத்தோலிக்க தேவாலயத்துக்கும் நீங்கள் திண்டுக்கல் வரும் பொது சென்று வர வேண்டும். இதுதவிர கிறிஸ்து அரசர் ஆலயம், புனித ஜோஸப் தேவாலயம் போன்றவை இந்நகரின் மற்ற முக்கிய தேவாலயங்கள்.

lock,dindigul,biryani,tourism,forts ,பூட்டு,திண்டுக்கல்,பிரியாணி,சுற்றுலா,கோட்டைகள்

கண்களுக்கு குளிர்ச்சி தரும் சிறுமலை மலை வாசஸ்தலம் திண்டுக்கல்-நத்தம் செல்லும் வழியில் உள்ளது. பெகாம்பூர் பெரிய பள்ளிவாசல், ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோவில், காசி விஸ்வநாதன் கோவில், காமாட்சியம்மன் தேவதானம்பட்டி, தாடிகொம்பு பெருமாள் கோவில், அபிராமி அம்மன் ஆலயம், ஆஞ்சனேயர் ஆலயம், ஆத்தூர் காமராசர் ஏரி, காமராசர் சாகர் அணை முதலியன திண்டுகல்லை சுற்றி அமைந்துள்ள பிராதான சுற்றுலா அம்சங்கள்.

இன்னொரு முக்கியமான கண்கவர் பகுதி வைகை, மருதை மற்றும் மஞ்சலாரு நதிகள் சங்கமமாகும் இடமாகும். மலையேறுபவர்கள் இந்நகரில் உள்ள சிறுமலையில் மலையேற்றத்தில் ஈடுபடலாம்.
மேலும் சின்னாளப்பட்டி, பயணிகளுக்கு பிடித்தமான மற்றொரு இடம். திண்டுக்கல் சமையல் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானது. திண்டுக்கல் அதன் பிரியாணிக்கு பேர்போனதால் அது பிரியாணி நகரம் என்ற பெயரிலும் பிரபலமாக அறியப்படுகிறது. எனவே திண்டுக்கல் வரும் பயணிகள் 'திண்டுக்கல் பிரியாணியை' சுவைத்திட மறந்துவிடக் கூடாது.

lock,dindigul,biryani,tourism,forts ,பூட்டு,திண்டுக்கல்,பிரியாணி,சுற்றுலா,கோட்டைகள்

திண்டுக்கல்லை அடைவது எப்படி?
திண்டுக்கல்லுக்கு நெருங்கிய விமான நிலையம் மதுரை விமான நிலையம் மற்றும் நெருங்கிய சர்வதேச விமான நிலையம் சென்னை ஆகும். திண்டுக்கல் ரயில் நிலையம் பல தமிழ்நாடு நகரங்களை இணைக்கிறது. உள்ளூர் பயணத்திற்கு, ஆட்டோரிக்ஷாக்கள் மற்றும் டாக்சிகள் எளிதாக கிடைக்கின்றன.

திண்டுக்கல் வானிலை
கோடை காலத்தில் திண்டுக்கல் நகரம் வெப்பம் மற்றும் ஈரப்பதம் நிறைந்து காணப்படும். திண்டுக்கல்லை சுற்றி பார்க்க சிறந்த பருவங்களாக மழைகாலம் மற்றும் பனி காலங்கள் அறியப்படுகின்றன. எனவே, திண்டுக்கல்லை செப்டம்பர் மற்றும் மார்ச் இடைப்பட்ட நாட்களில் சுற்றி பார்ப்பது மிகவும் சிறந்தது.

Tags :
|