Advertisement

  • வீடு
  • சுற்றுலா
  • இந்திய ஜவுளிகளின் பள்ளத்தாக்கான ஈரோட்டைச் சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்!

இந்திய ஜவுளிகளின் பள்ளத்தாக்கான ஈரோட்டைச் சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்!

By: Monisha Fri, 09 Oct 2020 3:09:23 PM

இந்திய ஜவுளிகளின் பள்ளத்தாக்கான ஈரோட்டைச் சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்!

தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையிலிருந்து தென் மேற்காக 400 கிமீ தொலைவிலும், வர்த்தக நகரமான கோயம்புத்தூரிலிருந்து 80 கிமீ தொலைவிலும், அழகே உருவாய் காவிரி மற்றும் பவானி நதிகளின் கரையில் அமைந்திருக்கிறது ஈரோடு நகரம். இந்த நகரம் விசைத்தறி மற்றும் கைத்தறி துணிகளின் உற்பத்தியில் மிகவும் புகழ் பெற்ற நகரமாகும். எனவே இந்நகரம் 'இந்திய ஜவுளிகளின் பள்ளத்தாக்கு' என்றும், 'இந்தியாவின் தறிகளின் நகரம்' என்றும் அழைக்கப்படுகிறது.

படுக்கை விரிப்புகள், லுங்கிகள், துண்டுகள், பருத்திப் புடவைகள், வேட்டிகள், தரைவிரிப்புகள் மற்றும் அச்சடிக்கப்பட்ட துணி வகைகள் ஆகியவை இந்நகரத்தில் மொத்த விலைகளில் விற்கப்படுவதால், விழாக்காலங்களில் இதன் உற்பத்தியாளர்கள் கணிசமாக அதிக லாபத்தை அடைகிறார்கள். இந்த துணி வகைகள் உலகின் பிற பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மேலும் மஞ்சள் பயிர் உற்பத்திக்காகவும் இந்த நகரம் பிரபலமாக அறியப்படுகிறது.

erode,tourism,tourist places,temples,dams ,ஈரோடு,சுற்றுலா,சுற்றுலாத் தலங்கள்,கோவில்கள்,அணைகள்

ஈரோட்டைச் சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்
வருடம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லக்கூடிய வகையில், ஈரோட்டில் அமைந்துள்ள கோவில்களாக திண்டல் முருகன் கோவில், அருத்ரா கபாலீஸ்வரர் கோவில், கஸ்தூரி அரங்கநாதர் கோவில், மகிமாலீஸ்வரர் கோவில், நடத்ரீஸ்வரர் கோவில் மற்றும் பரியூர் கொண்டாத்து காளியம்மன் கோவில் ஆகியவை உள்ளன.

பார்வையாளர்கள் ஈரோட்டிலிருக்கும் புகழ் பெற்ற சர்ச்சுகளான செயின்ட் மேரிஸ் சர்ச் மற்றும் ப்ரோ சர்ச்சையும் பார்வையிடலாம். சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தை அதிகமாக ஈர்க்கும் புகழ் பெற்ற அணைக்கட்டுகளாக பவானி சாகர் அணைக்கட்டு மற்றும் கொடிவேரி அணைக்கட்டு ஆகியவை அறியப்படுகின்றன. பிற சுற்றுலாத் தலங்களாக பெரியார் நினைவு இல்லம், வெள்ளோடு பறவைகள் சரணாலயம், அரசு அருங்காட்சியகம், கரடியூர் வியூ பாயிண்ட், பவானி மற்றும் பண்ணாரி ஆகியவை உள்ளன.

erode,tourism,tourist places,temples,dams ,ஈரோடு,சுற்றுலா,சுற்றுலாத் தலங்கள்,கோவில்கள்,அணைகள்

ஈரோட்டின் பருவநிலை
சாதாரணமாகவே ஈரோடு மாவட்டத்தில் பருவநிலை வறட்சியானதாகவும், மழை போதுமான அளவிற்கு இல்லாமலும் இருக்கும். பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இந்நகரத்தின் பருவநிலை காவிரி நதியுடன் சேர்ந்து மிகவும் ஈரப்பதமுடையதாக இருக்கும். ஏப்ரல் மாதத்தில் வெப்பநிலை உயர்ந்து அதிகபட்ச அளவை அடையும். ஜுன், ஜுலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் பாலக்காட்டுக் கணவாயின் இடைவெளியில் குளிர்ந்த காற்று வீசத் தொடங்கும், ஆனால் அந்த காற்று ஈரோட்டை அடையும் போது அதன் குளிர்ச்சி குறைந்து போய், வெப்பமுடனும், தூசிகளுடன் வீசத் தொடங்கிவிடும்.

ஈரோட்டை அடைவது எப்படி?
ஈரோட்டிற்கு அருகிலேயே கோயம்புத்தூர் விமான நிலையம் உள்ளது. ஈரோடு நகரம் முக்கியமான நகரங்களுடன் தொடர்புடைய நெடுஞ்சாலைகளுடன் சிறப்பாக இணைக்கப்பட்டுள்ளது. ஈரோட்டிலேயே பெரியதாக இரயில் நிலையமும் உள்ளது. அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் செல்வதற்கு ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து பஸ் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

நகரத்திற்குள் சுற்றிப் பார்க்க விரும்பும் சுற்றுலாப் பயணிகள் டாக்ஸிகள், ஆட்டோக்கள், சைக்கிள் ரிக்ஷாக்கள் ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். முக்கியமான நகரங்களான பெங்களூரு, கோவை, சென்னை, கொச்சி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களிலிருந்து ஈரோட்டை சாலை வழியில் எளிதில் அடைய முடியும். தனியார் பேருந்துகள் மற்றும் டாக்ஸிகளும் ஈரோட்டில் எளிதாக கிடைக்கின்றன. சுற்றுலா முகவர்கள் இயக்கிவரும் டாக்ஸிகளில் சுற்றுலாப் பயணிகள் உள்ளூர் மற்றும் வெளியிடங்களுக்கு சென்று வர முடியும்.

Tags :
|