Advertisement

குளு குளு குளியல் போட குற்றாலம் போகலாம் வாங்க!

By: Monisha Sat, 19 Sept 2020 2:44:56 PM

குளு குளு குளியல் போட குற்றாலம் போகலாம் வாங்க!

தென் இந்தியாவின் ஸ்பா என்று பிரபலமாக அறியப்படும் குற்றாலம், தென்னிந்திய மாநிலமான தமிழ் நாட்டில் உள்ள தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். மேற்கு தொடர்ச்சி மலைகளின் மீது கடல் மட்டத்திலிருந்து 167 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள குற்றாலம், எண்ணற்ற சுகாதார ஓய்வு விடுதிகள், கிளினிக்குகள் மற்றும் மருத்துவ குணம் கொண்ட நீர்வீழ்ச்சிகளை தன்னகத்தே கொண்டுள்ளது. எண்ணற்ற அருவிகளும் மற்றும் ஆறுகளும் இவ்விடத்தின் கண்களை கவரும் அழகை மேலும் அதிகரிக்க செயவதால் இன்று மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.

குற்றாலம் மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுலா இடங்கள்
இந்த நகரத்தின் அழகை பறைசாற்றுவது மட்டுமின்றி, இந்நகரமானது அதன் அழகிய நீர்வீழ்ச்சிகளான பேரருவி, சிற்றருவி, செண்பகதேவி நீர்வீழ்ச்சி தேனருவி, ஐந்தருவி, பழத்தோட்ட அருவி, பழைய குற்றால அருவி, மற்றும் புலி அருவி போன்ற நீர்வீழ்ச்சிகளுக்கு புகழ்பெற்றது. மேலும் இந்நகரில் பல்வேறு கோயில்கள் உள்ளன. அவை திருகுற்றால நாதர் கோவில், திருமலை கோவில், குமரன் கோவில், காசி விஸ்வ நாதர் கோவில், தக்ஷினாமூர்த்தி கோவில், பாப நாசம் உலகாம்பிகை மற்றும் சிவன் கோவில், ஐயப்பன் கோவில் முதலியன.

courtallam,waterfalls,tourist place,temples,parks ,குற்றாலம்,நீர்வீழ்ச்சி,சுற்றுலாத்தலம்,கோயில்கள்,பூங்காக்கள்

இந்நகரத்தை சுற்றியுள்ள மற்ற கண்கவர் இடங்கள் தெற்கு மலை எஸ்டேட், ஐந்தருவியை ஒட்டி அமைந்துள்ள படகு இல்லம், மற்றும் பழைய குற்றால அருவி. பாம்பு பண்ணையும், மீன் பண்ணையும் பேரருவிக்கு அருகில் அமைந்துள்ளன மற்றும் சிறுவர்களுக்கான பூங்காக்களும் நிறைய உள்ளன.

குற்றாலம் என்ற பெயர் உள்ளூர் மக்களால் இன்னும் பயன்படுத்தப்பட்டு வரும் குத்தாலம் என்ற பெயரின் திரிபாகும். இந்த அருவி முக்திவேலி, நன்னகரம், கந்தபிதூர், தீர்த்தபுரம், திரு நகரம் மற்றும் வசந்த பேரூர் என்ற பல பெயர்களால் அறியப்படுகிறது.

இந்த நகரத்தோடு தொடர்புடைய ஒரு பிரபலமான புராணக்கதை உள்ளது. சிவன் கைலாசமலையில் நடைபெறும் தனது திருகல்யானத்திற்கு செல்வதற்காக தெற்கில் முண்டியடித்த பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த அகஸ்திய முனிவரை அனுப்பினார் என்று நம்பப்படுகிறது. குற்றாலத்திலுள்ள பெரும்பாலான கோவில்கள் சிவனிற்கு அர்பணிக்கப்பட்டுள்ளன. பாண்டிய மற்றும் சோழ மன்னர்களின் பல்வேறு வரலாறுகள் இக்கோவில்களில் உள்ள கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

courtallam,waterfalls,tourist place,temples,parks ,குற்றாலம்,நீர்வீழ்ச்சி,சுற்றுலாத்தலம்,கோயில்கள்,பூங்காக்கள்

குற்றாலத்தை அடைவது எப்படி?
சமீப காலமாக குற்றாலம் ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக மாறி வருவதால் உலக தரம் வாய்ந்த தங்கும் விடுதிகள் இங்கு எழுப்பபட்டு வருகின்றன. குறிப்பாக சீசன் அதிகமாக உள்ள நேரங்களில் முன் பதிவு செய்து வருமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இந்நகரம் கேரளா மற்றும் தமிழ் நாடு மாநிலங்களுக்கு அருகில் இருப்பதால் இந்த இரு மாநிலங்களின் வழியாக எளிதில் அணுக முடியும். குற்றாலத்தில் இருந்து 85 கி. மீ தொலைவில் உள்ள தூத்துக்குடி குற்றாலம் அருகிலுள்ள நெருங்கிய விமான நிலையம் ஆகும். சென்னை மதுரை மற்றும் கோயம்புத்தூர் விமான நிலையங்களுடன் இது இணைக்கப்பட்டுள்ளது.

இதன் அருகிலுள்ள ரயில் நிலையம் செங்கோட்டை. எனினும் திருநெல்வேலி இதன் அருகிலுள்ள பெரிய ரயில் சந்திப்பாகும். தமிழ் நாடு மற்றும் கேரளாவின் பல்வேறு நகரங்களில் இருந்து பேருந்து மூலமாகவும் குற்றாலத்தை அடைய முடியும்.

courtallam,waterfalls,tourist place,temples,parks ,குற்றாலம்,நீர்வீழ்ச்சி,சுற்றுலாத்தலம்,கோயில்கள்,பூங்காக்கள்

குற்றாலம் வருவதற்கு சிறந்த பருவம் எது?
குற்றாலத்தை சுற்றிப்பார்க்க சிறந்த பருவம் ஜூலை முதல் மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட பருவமழை மற்றும் குளிர்கால பருவங்கள் ஆகும். கோடைகாலம் வெப்பமாகவும் வறண்டும் காணப்படுவதால் முக்கிய சுற்றுலா ஈர்ப்பான அருவிகள் தண்ணீர் வரத்து குறைந்து காணப்படும். பருவ மழை மாதங்களும் அதே போல் குளிர்கால மாதங்களும் மிகவும் இனிமையாக இருக்கும். ஆண்டின் இந்த பருவ மழை காலங்களில் காணப்படும் மழைச்சாரலும், இதமான காற்றும் இந்த காலகட்டத்தில் இந்நகரை சுற்றிப்பார்பதற்கு மேலும் வசீகரிப்பதன் மூலம் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றன.

Tags :