Advertisement

  • வீடு
  • சுற்றுலா
  • முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா செல்ல ஆசையா?

முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா செல்ல ஆசையா?

By: Monisha Tue, 22 Sept 2020 1:19:37 PM

முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா செல்ல ஆசையா?

இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடல் சங்கமிக்கும் இடத்தில் பேரழகாய் உருவாகியது கன்னியாகுமரி மாவட்டம். இதன் வடக்கு மற்றும் கிழக்கு திசையில் திருநெல்வேலி மாவாட்டமும், வடமேற்கு மற்றும் மேற்கு திசையில் கேரள மாநிலமும் அமைந்திருக்கின்றன.

கோயில் மற்றும் கடற்கரைகள்
கலை மற்றும் பண்பாடுகளில் நாட்டம் இல்லாதவர்களுக்கு நிச்சயம் கன்னியாகுமரி உகந்த இடம் அல்ல. ஆயினும் கன்னியாகுமரியிலுள்ள கோயில்களும் கடற்கரைகளும் பல சுற்றுலாப் பயணிகளையும் புனித பயணம் செல்பவர்களையும் கவரும் வண்ணம் உள்ளன. விவேகானந்தர் பாறை, விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை வட்டகோட்டை, பத்மநாபபுரம் அரண்மனை, வாவத்துறை, உதயகிரி கோட்டை மற்றும் காந்தி அருங்காட்சியகம், ஆகியவைகள் தான் இங்குள்ள மிக முக்கியமான சுற்றுலாத் தலங்கள்.

இங்குள்ள முக்கிய புண்ணிய ஸ்தலங்களில் கன்னியாகுமரி கோயில் சித்தாறல் மலைக்கோயில் மற்றும் ஜெயின் நினைவுச் சின்னங்கள், நாகராஜ கோயில், சுப்பிரமணிய கோயில், திருநந்திக்கரை குகைக்கோயில் ஆகியவை அடங்கும். குடும்பம் மற்றும் நண்பர்களோடு வரும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் கவரப்படுவது இங்குள்ள கடற்கரைகளாலே. இதில் சங்குத்துறை, தேங்காப்பட்டினம் மற்றும் சொத்தவிளை கடற்கரைகள் மிகவும் பிரபலம்.

kanyakumari,temple,beaches,handicrafts,foods ,கன்னியாகுமரி,கோயில்,கடற்கரைகள்,கைவினைப் பொருட்கள்,உணவு வகைகள்

கன்னியாகுமரியில் வாங்கக் கிடைக்கும் பொருட்கள்
கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்கி மகிழ்வோருக்கு உகுந்த இடமல்ல கன்னியாகுமரி. இருப்பினும் இங்கே நம் மனம் விரும்பியவர்களுக்கான நினைவுக் குறிப்புகள் வாங்க பல கடைகள் உண்டு. பலவிதமான கடல் சிப்பிகளும், சிப்பிகளை வைத்து உண்டாக்கிய ஆபரணங்கள் மற்றும் நினைவுக் குறிப்புகளும் கிடைக்கும்.

உள்ளூர் மக்களால் செய்து விற்கப்படும் கைவினைப் பொருட்களும் ஏராளமாக கிடைக்ககூடும். இந்த அழகிய பொருட்கள் பிரம்பு, மூங்கில் மற்றும் மரத்தினால் செய்யப்பட்டவைகள். இவைகளை வாங்கி நம் வீட்டை அலங்கரிக்கலாம் அல்லது உற்றார், உரிவினர் மற்றும் நண்பர்களுக்கு பரிசளிக்காம். பல விதமான கடல் சிப்பிகள் மற்றும் பல வண்ணக் கடல் மண்ணால் செய்யப்பட்ட சிறிய வகை ஆபரணங்களையும் வாங்கலாம்.

இண்டோ ப்ராடக்ட்ஸ், தமிழ்நாடு கோ-ஆப்டெக்ஸ் சேல்ஸ் எம்போரியம் மற்றும் தமிழ்நாடு கிராப்ட்ஸ் அண்ட் பூம்புகார் ஆகியவை கன்னியாகுமரியிலுள்ள சில முக்கிய கடைகள். பலதரப்பட்ட ஆடை வகைகள் மற்றும் கைவினை பொருட்களை இங்கே வாங்கலாம். தெரு ஓரங்களில் விற்கப்படும் பொருட்களை மலிவான விலைக்கு வாங்கலாம்.

kanyakumari,temple,beaches,handicrafts,foods ,கன்னியாகுமரி,கோயில்,கடற்கரைகள்,கைவினைப் பொருட்கள்,உணவு வகைகள்

சாப்பாட்டு பிரியர்களுக்கு
கன்னியாகுமரியில் புகழ் பெற்ற உணவு வகைகள் என்றால் அது கடல் உணவுகள் தான். காரசாரமான உணவுகள் இங்கே அதிகம் கிடைக்கும். தேங்காய் சேர்க்காத உணவே இல்லை என்று சொல்லும் அளவிற்கு, தேங்காயின் பயன்பாடு அதிகமாக இருக்கும். பெரும்பாலான உணவகத்தில் எல்லா வகையான தெற்கிந்திய உணவு வகைகளும் கிடைக்கும். இதில் இட்லி, வடை, தோசை மற்றும் ஊத்தாப்பம் அடங்கும். இது போக சில சைனீஸ், ராஜஸ்தானி மற்றும் குஜராத்தி வகை உணவகங்களும் இருக்கின்றன.

கன்னியாகுமரியை அடைய
கன்னியாகுமரியின் மிக அருகில் இருக்கும் விமான நிலையம் திருவனந்தபுரத்தில் உள்ளது. சுற்றுலாப் பயணிகள் விமான நிலையத்திலிருந்து டாக்ஸி, ரயில் அல்லது பேருந்து மூலியமாக கன்னியாகுமரியை வந்தடையலாம். ஊருக்குள் சுற்றித்திறிய ஆட்டோ, தனியார் டாக்ஸி அல்லது உள்ளூர் பேருந்தை பயன்படுத்தலாம்.

கன்னியாகுமரிக்கு சுற்றுலா செல்ல உகுந்த நேரம்

கன்னியாகுமரிக்கு சுற்றுலா செல்ல உகுந்த நேரம் அக்டோபர் முதல் பிப்ரவரி வரை. இந்த இடைப்பட்ட காலத்தில் இனிமையான பருவநிலையை அனுபவிக்கலாம். ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலானாது மழைக்காலம் என்பதால் இந்நேரத்தில் செல்வதை தவிர்ப்பது நல்லது.

Tags :
|