சபரிமலையில் அலைமோதும் கூட்டம் ... பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு

சபரிமலை: சிறப்பு ஏற்பாடு ........கேரளாவில் உள்ள சபரிமலையில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் பக்தர்கள் எண்ணிக்கை வழக்கத்தை விட மிக அதிகமாக இருக்கும். இந்த மாதத்தில் பக்தர்கள் மாலை அணிந்து மலையேறி ஐயப்பனை தரிசிக்க வந்த வகையில் இருப்பர்.

அந்த வகையில் நடப்பு ஆண்டு கார்த்திகை மாத விரதம் தொடங்கி விட்டது. தற்போது மண்டல பூஜை நடைபெற்று வருவதால் பல லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்துள்ளனர்.

இதை அடுத்து கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு தான் எந்த வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து பக்தர்களின் வருகையை முன்னிட்டு தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாடுகளை செய்து கொண்டு வருகிறது.

அந்த வகையில் கோவிலில் உள்ள விருந்தினர் மாளிகையில் ஒரே நேரத்தில் 17,017 பேர் தங்கும் அளவில் பிரமாண்ட அறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் இங்கு தங்கி ஓய்வு எடுக்கலாம் என சபரிமலை தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.