வீடுகளில் எலுமிச்சை விளக்குகளை ஏற்றலாமா? பெரியவர்கள் விளக்கம்

வீடுகளில் எலுமிச்சை விளக்குகளை செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் தொடர்ந்து ஏற்றுவதில் தவறில்லை என்று ஆன்மீக பெரியவர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.

வீட்டில் சுபகாரியங்கள் நடத்துவதில் தடங்கல் ஏற்பட்டால் ராகுகாலத்தில் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் துர்க்கை அம்மன் சன்னதியில் எலுமிச்சையில் விளக்கு ஏற்றி வழிபடுவது வழக்கம்.

தற்போது உலகம் முழுவதும் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில், கோவிலுக்கு போகாமல் வீட்டிலேயே இந்த எலுமிச்சை விளக்கை ஏற்றுவது சரியானதா என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது.

நினைத்த காரியம் நிறைவேறவும், காரியத் தடைகளை அகற்றவும், குறித்த காலத்தில் திருமணம் நடைபெறவும் வீடுகளில் எலுமிச்சை விளக்குகளை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் தொடர்ந்து ஏற்றுவதில் தவறில்லை என்கின்றனர் ஆன்மிகப் பெரியவர்கள்.

எலுமிச்சம்பழத்தை இரண்டாக நறுக்கி, அதன் சாற்றை பிழிந்து விட்டு தோலை உட்புறமாக திருப்பி அதில் நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு தீபம் ஏற்றலாம். ஒற்றைப்படை எண்ணிக்கைகளில் விளக்குகளை ஏற்றுவது சிறப்பான பலன்களைத் தரும்.

பிரார்த்தனைகள் தவிர வீட்டில் துர்சக்திகள், மற்றும் எதிர்மறை ஆற்றல்களையும் அழிந்து விடும் சக்தி வாய்ந்தது இந்த எலுமிச்சை விளக்கு பரிகாரம்.