காகம் தலையில் தட்டி விட்டதா? இதை செய்யுங்கள்!!!

காகம் தலையில் தட்டிவிட்டு சென்றால் பயம் வேண்டாம். இதோ அதற்காக நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.

சாலையில் வாகனங்களில் செல்லும் போதோ, மொட்டை மாடிகளில் , வீதிகளில் நடக்கும் போதோ சிலருக்கு, காகம் தலையில் தட்டி விடும். உடனே சனி பிடித்துவிட்டதாக நினைத்து பயங்கரமான குழப்பத்திலும், மன அழுத்தத்திற்கும் ஆளாகி விடுவர்.

பொதுவாகவே எல்லாப் பறவைகளுக்கும் எதிர்காலப் பிரச்சினைகளை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் ஆற்றல் உண்டு. காகத்தை பொறுத்தவரை முன்னோர்கள் வழிபாட்டையே நமக்கு சுட்டிக் காட்டுகிறது. இது சனீஸ்வரனின் வாகனமாகவும் இருப்பதாலேயே இரட்டிப்பு பயம் உருவாகிறது.

காகமானது நம்முடைய தலையில் தட்டினால், நமக்கு வரக்கூடிய இன்னல்களை முன்கூட்டியே நமக்குத் தெரியப்படுத்துகிறது.காகம் தலையில் தட்டி விட்டால் குடும்பத்துடன் சேர்ந்து அவரவர் வழக்கப்படி, குலதெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும்.

முன்னோர்களுக்கு திதி கொடுப்பதில் குறை இருக்கும் பட்சத்தில் அடுத்து வரும் அமாவாசையில் நிறைவான படையல்களை போட்டு, மனதார, ஏதாவது குற்றம் இருந்தால் அதை மன்னிக்கும்படி வேண்டிக் கொள்வது சிறப்பான பலன்களைக் கொடுக்கும்.

முன்னோர்கள் ரூபத்தில் இருக்கும் காகம் தலையில் தட்டி விட்டால், நமக்கு வர இருக்கும் பிரச்சனைகளை அறிவித்து சரி செய்து கொள்ள அறிவுறுத்துகிறது என எடுத்துக் கொள்ள வேண்டும்.