திருப்பதி .. டிசம்பர் மாத சாமி தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் டிக்கெட் இன்று வெளியீடு

திருப்பதி: டிசம்பர் மாத தரிசன டிக்கெட் வெளியீடு ... உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் சாமி தரிசனம் செய்வது வழக்கம். தற்போது கோடை விடுமுறை என்பதால் நாடு முழுவதிலும் உள்ள பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து கொண்டு வருகின்றனர்.

எனவே இதன் காரணமாக திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் அத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசன டிக்கெட்டுகள் தேவஸ்தானம் சார்பில் ஒவ்வொரு மாதமும் ஆன்லைனில் வெளியிடப்பட்டு வருகிறது.


இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் மாத சாமி தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் டிக்கெட் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டு உள்ளது.

இதனை அடுத்து வருகிற டிசம்பர் 1 முதல் 22 வரை ரூ.300 தரிசன டிக்கெட் காலை 10 மணி முதல் என்ற tirupatibalaji.ap.gov.in இணையதள பக்கத்தில் முன்பதிவு செய்யலாம் என்று திருப்பதி தேவஸ்தானம் தகவல் தெரிவித்து உள்ளது.