திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவத்தில் இலவச தரிசனத்திற்கு மட்டுமே அனுமதி

திருப்பதி : ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 ஆண்டுகளுக்கு 1 முறை நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. பொதுவாகவே பண்டிகை தினங்கள் மற்றும் வார இறுதி நாட்களில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்து பல மணி நேரங்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செய்கின்றனர்.

இந்த நிலையில், 3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தாண்டு வருகிற செப்டம்பர் 18 முதல் 26ம் தேதி வரை வருடாந்திர பிரமோற்சவம் நடைபெற இருப்பதாக தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.

இதையடுத்து இந்த வருடாந்திர பிரமோற்சவத்தை முன்னிட்டு வருகிற செப்டம்பர் 22ஆம் தேதி கருட சேவை, 23ம் தேதி தங்கத் தேரோட்டம் மற்றும் செப்டம்பர் 25ம் தேதி தேரோட்டம் நடைபெறும் எனவும் தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.

மேலும் இது மட்டுமல்லாமல் வருடாந்திர பிரமோற்சவம் புரட்டாசி மாதத்தில் வந்துள்ள நிலையில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, வருடாந்திர பிரமோற்சவத்திற்கு விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டு இலவச தரிசனத்திற்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.