அஷ்டமியையொட்டி சிவன் கோவில்களில் உள்ள காலபைரவருக்கு……. சிறப்பு வழிபாடு

நாமக்கல் : நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவில், பாண்டமங்கலம் பழைய காசி விஸ்வநாதர் ஆலயம், பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூர் வடபழனி ஆண்டவர் கோவிலில் உள்ள சிவன் கோவில், வடகரையாத்தூர் சிவன் கோவில், ஜேடர்பாளையம் சிவன் கோவில் மற்றும் பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் காலபைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டது. பால், தயிர் ,பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் கொண்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

இதனால் அப்பகுதியில் உள்ள பக்தர்கள் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்களும் தங்கள் மனம் குளிர காலபைரவை வணங்கி தனது மனக்குறையை போக்கி கொண்டனர். மேலும் இக்கோயில் உள்ள பரமேஸ்வரர், அரசாயிஅம்மன், மாசாணி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன் போன்ற தெய்வங்களையும் வணங்கி அவர்களின் அருளையும் பெற்றனர். இதனையடுத்து அனைத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.