திருப்பதி பவித்ரோற்சவம் ... ஆன்லைனில் ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி தரிசன டோக்கன்கள் வெளியீடு

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்டு மாதம் 8-ந்தேதியில் இருந்து 10-ந்தேதி வரை பவித்ரோற்சவம் நடக்கிறது. அதில் பங்கேற்று தரிசனம் செய்யும் பக்தர்களுக்காக திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ஆன்லைனில் ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி காலை 10 மணியளவில் தரிசன டோக்கன்களை வெளியிடுகிறது

அதன்படி. மொத்தம் 600 தரிசன டோக்கன்கள் ஆன்லைனில் வழங்கப்படுகின்றன. பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து பவித்ரோற்சவத்தில் பங்கேற்று சாமி தரிசனம் செய்யலாம்.

இதனை தொடர்ந்து பவித்ரோற்சவத்தில் பங்கேற்கும் பக்தர்கள் பாரம்பரிய உடையில் காலை 7 மணியளவில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் 1-க்கு வர வேண்டும். தரிசன டோக்கன்களுடன் ஏதேனும் அசல் புகைப்பட அடையாள அட்டையை கொண்டு வந்து தேவஸ்தான அதிகாரிகளிடம் காண்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு www.tirumala.org அல்லது www.tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம். மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் தெரிவித்துள்ளது.