திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.2 கோடியே 71 லட்சம் வசூல்

திருவண்ணாமலை :உண்டியல் காணிக்கையாக ரூ.2 கோடியே 71 லட்சம் .... திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில், பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கி கொண்டு வருகிறது. இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும், ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்து செல்வர்.

இதையடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்தும் உண்டியல் காணிக்கைகள் மாதந்தோறும் எண்ணப்பட்டு வருகிறது. எனவே அதன்படி, ஜனவரி மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி புதன்கிழமை கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் இணை ஆணையர் அசோக்குமார் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் பக்தர்கள், தன்னார்வலர்கள், கோவில் பணியாளர்கள் என்று நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். காணிக்கை எண்ணும் பணி முதன்முறையாக கோவில் இணையதளத்தில் நேரலை செய்யப்பட்டது.

இதனை அடுத்து முடிவில் ஜனவரி மாத உண்டியல் காணிக்கையாக ரூ.2 கோடியே 71 லட்சத்து 96 ஆயிரத்து 869 காணிக்கையாக கிடைக்கப்பெற்றது. மேலும், 320 கிராம் தங்கம் , 2 கிலோ 684 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு கரன்சி நோட்டுகளும் வசூலானதாக கோவில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.