சபரிமலை பக்தர்கள் வசதிக்காக சென்னை சென்ட்ரலில் இருந்து கோட்டயத்துக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்

சபரிமலை : சென்னை - கோட்டயம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் .... சபரிமலை மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகளை முன்னிட்டு, பக்தர்கள் வசதிக்காக சென்னை சென்ட்ரலில் இருந்து கோட்டயத்துக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து வருகிற நவ.26, டிச.3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமைகளில்) இரவு 11.30 மணிக்கு வாராந்திர சிறப்பு கட்டண ரயில் (06027) புறப்பட்டு, மறுநாள் மதியம் 1.10 மணிக்கு கோட்டயத்தை அடையும்.

கோட்டயத்திலிருந்து நவ.27, டிச.4, 11, 18, 25, ஜனவரி 1 ஆகிய தேதிகளில் (திங்கள்கிழமைகளில்) இரவு 7 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் (06028) புறப்பட்டு, மறுநாள் காலை 10.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தை வந்தடையும்.

இதனை அடுத்து இந்த ரயில் பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக கோட்டயம் சென்றடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டது. இந்த தகவலை தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.