அழகை மேம்படுத்த உதவும் மசாலாப் பொருட்களில் பேஸ் பேக் செய்முறை

சென்னை: உணவின் சுவையை அதிகரிக்க மசாலாப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அழகை மேம்படுத்தும் சில மசாலாக்கள் உள்ளன. அவை சரும பிரச்சினைகளை அகற்ற உதவுகின்றன என்று தெரியுங்களா?

வகையில் மசாலாப் பொருட்களைக் கொண்டு ஃபேஸ் பேக் செய்து முகத்தில் தடவி வந்தால் பரு, முகப்பரு, சுருக்கங்கள் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். எனவே நீங்களும் சரும பிரச்சனைகளில் இருந்து விடுபட வேண்டுமானால், இலவங்கப்பட்டை மற்றும் பிரியாணி இலைகளை கொண்டு ஃபேஸ் பேக் தயார் செய்யலாம். இந்த ஃபேஸ் பேக்குகளை எவ்வாறு தயாரிப்பது மற்றும் நமது சருமத்திற்கு இதனால் ஏற்படும் நன்மைகள் என்ன என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
இலவங்கப்பட்டை தூள் - 2 தேக்கரண்டிபிரியாணி இலை தூள் - 1 தேக்கரண்டிஎலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டிதேன் - 2 தேக்கரண்டிபால்.

செய்முறை: ஃபேஸ் பேக் தயார் செய்ய, ஒரு பாத்திரத்தில் இலவங்கப்பட்டை மற்றும் பிரியாணி இலை தூள்களை சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும். இதனும் பால் சேர்த்து பேஸ்ட் போன்று செய்துக் கொள்ளவும். இப்போது அதில் எலுமிச்சை மற்றும் தேனை சேர்த்து நன்கு கலக்கவும். ஃபேஸ் பேக் தயார்.

இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் தடவுவதற்கு முன் முகத்தை நன்றாகக் கழுவவும். பின்னர் இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் கழித்து கழுவவும். முகத்தை கழுவிய பின் அதன் மேல் மாய்ஸ்சரைசரை தடவவும்.

இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் தடவினால் பருக்கள் நீங்கும். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் பருக்களை நீக்கும். இலவங்கப்பட்டை மற்றும் பிரியாணி இலையின் ஃபேஸ் பேக் பருக்களை அகற்ற மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.