முகம் பளபளக்க கொஞ்சமாக முல்தானிமெட்டி இருந்தா போதுங்க!!!

சென்னை: என்னது கொஞ்சமா முல்தானி மெட்டி இருந்தா மட்டும் போதும் முகம் பளபளக்குமா.

முல்தானி மெட்டி என்பது ஒரு வகை களிமண் சார்ந்த அழகு சாதன பொருள். முல்தானி மெட்டியை பயன்படுத்தி அழகு படுத்திக் கொள்வது என்பது புதிதாக தொடங்கிய பழக்கம் கிடையாது. அந்த காலம் முதலே பயன்படுத்திய இயற்கையான ஒரு அழகு சாதன பொருள் தான். இப்போது இந்த அழகு குறிப்பில் முல்தானி மெட்டியை பயன்படுத்தி நம்மை அழகு படுத்தி கொள்வது எப்படி என்பது தான் பார்க்க போகிறோம்.

முல்தானி மெட்டியில் சிறிதளவு காய்ச்சாத பாலை சேர்த்து நன்றாக குழைத்து முகத்தில் போட்டு வந்தால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள், அழுக்கு அனைத்தும் நீங்கி முகம் நல்ல பொலிவை பெறும். அதேபோல் முல்தானி மெட்டியில் ரோஸ் வாட்டரையும் கலந்து தேய்க்கலாம்.

இதுவும் முகத்திற்கு ஒரு நல்ல பொலிவை தரும். இதே போல் முல்தானி மெட்டியுடன் தயிரை சேர்த்து முகத்தில் தேய்க்கும் போது முகத்தில் இருக்கும் தேவையற்ற இறந்த செல்கள், அனைத்தும் வெளியேறி முகம் பளபளப்பாகும்.

தலைக்கு முல்தானி மெட்டியை எப்படி பயன்படுத்தும் முறை: முல்தானி மெட்டி 1 ஸ்பூன், தயிர் 1 ஸ்பூன், வெட்டி வேர் ஊற வைத்து தண்ணீர் ஸ்பூன், இவை மூன்றையும் ஒன்றாக கலந்து பேஸ்ட் பதத்திற்கு வந்தவுடன் இதை உங்கள் தலையில் வேர்க்கால்களில் தடவி பத்து நிமிடம் அப்படியே விட்டுவிடுங்கள்.

அதன் பிறகு தலைக்கு குளிக்கும் பொழுது முடி மிருதுவாகவும் நீளமாகவும் வளரும். அது மட்டுமின்றி தலையில் உள்ள அழுக்கு முழுவதும் நீங்குவதுடன் முடி வறட்சி இல்லாமலும் இருக்கும்.

தலையில் பேன் பொடுகு தொல்லை இருப்பவர்கள் இந்த பேக்குடன் சிறிதளவு எலுமிச்சை சாறையும் கலந்து தேய்த்தால் இந்த தொல்லைகள் கூட அறவே நீங்கிவிடும்.