பருத்தொல்லையை போக்க இயற்கை வழிமுறை உங்களுக்காக!!!

சென்னை: பருத்தொல்லை முகத்தின் அழகைக் கெடுத்து அகத்தின் தன்னம்பிக்கையை சரித்து விடுகிறது. இளம் பருவத்தினருக்குக் குறிப்பாக அதிக எண்ணெய்ப் பசையுள்ள சருமத்தினருக்கு பரு ஒரு மிகப் பெரிய சவால். பருவைப் போக்கும் இரண்டு ஃபேஸ்பேக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அவை மஞ்சள் - கற்றாழை ஃபேஸ் பேக்தான்.

தேவையானவை
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் ( தரமானதை தேர்வு செய்யுங்கள்)கற்றாழை ஜெல் - 1 டீஸ்பூன்.

கற்றாழையின் மடலில் இருக்கும் நுங்கு போன்ற ஜெல்லை எடுத்து நன்றாக கசக்கி அதில் மஞ்சள் தூள் சேர்த்து இரண்டையும் பேஸ்ட் பதத்துக்கு குழைக்கவும். இதை முகம் முழுக்க தடவி உலரவிட்டு வெதுவெதுப்பான அல்லது மந்தமான நீரில் கழுவி எடுக்கவும்.

பலன்கள்:இது சிறந்த பேக் என்பதோடு எளிமையானது. கற்றாழை இயற்கையாகவே பாக்டீரியா எதிர்ப்பு தன்மை கொண்டிருக்கிறது. இது சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகிறது.

நச்சுக்களை போக்கி சருமத்தை சுத்தப்படுத்துகிறது. மஞ்சள் சிறந்த கிருமி நாசினி. இது சருமம் பாதிக்கப்படுவதை தடுக்கிறது.