தினமும் ஷாம்பூ குளியல் செய்பவர்கள் கவனத்திற்கு....!

சென்னை: ஷாம்பூவை எப்போதுமே உச்சந்தலையில் தான் தடவ வேண்டும். தலையில் படிந்துள்ள தூசு, துகள், எண்ணெய் பசை, பொடுகை ஆகியவற்றை நீக்குவதற்கு தான் ஷாம்பூ. அதனால் ஷாம்பூவை பயன்படுத்துவதில் கவனம் தேவை.

நம்மில் பலரும் தலைக்கு குளிக்கும் போது ஷாம்பூவை பயன்படுத்துகிறோம். ஆனால் எந்த ஷாம்பூவை நீங்கள் பயன்படுத்தினாலும், அதுகுறித்து நன்றாக தெரிந்துகொள்ளுங்கள். ஷாம்பூ வாங்குவதற்கு முன்னர், நன்கு ஆய்வு செய்துவிட்டு ஒரு பிராண்டை மட்டும் முடிவு செய்யுங்கள்.

என்ன இருந்தாலும் ஷாம்பூவை அவ்வப்போது மாற்றி பயன்படுத்துவது முடி உதிர்வதை தடுக்காது. வெளியில் அலைந்து திரிபவராக இருந்தால், தினசரி ஷாம்பூ பயன்படுத்தலாம். தினமும் வெளியில் அலைபவர்கள், சூரியன் வெப்பத்துக்கு வெளிப்பட நேரிடும். இதனால் தலையில் வியர்வை அதிகளவில் சுரக்கும்.

இதையொட்டி தினமும் ஷாம்பூவை பயன்படுத்தி தலையை சுத்தம் செய்வது நன்மையாகவே அமையும். அதுதவிர, ஷாம்பூவை தினமும் பயன்படுத்த முடியாது என்றால், தினசரி உடற்பயிற்சி செய்யலாம். ஈரப்பதமில்லாத பகுதிகளில் வாழ்பவர்களும் தினமும் ஷாம்பூவை பயன்படுத்தி தலை குளிக்கலாம்.

ஷாம்பூவை எப்போதுமே உச்சந்தலையில் தான் தடவ வேண்டும். தலையில் படிந்துள்ள தூசு, துகள், எண்ணெய் பசை, பொடுகை ஆகியவற்றை நீக்குவதற்கு தான் ஷாம்பூ. எப்போதுமே முடியின் வேரின் எண்ணெய் பசை இருக்கும்.

அதனால் ஷாம்பூவை பயன்படுத்துவதில் கவனம் தேவை. முடியின் இடையில் விரல்களை விட்டு, உள்ளங்கையை கொண்டு நன்கு தேய்க்க வேண்டும். மேலும் கேசத்தின் வேரை நன்றாக தேய்து கழுவிட வேண்டும். நகங்களை வைத்து உச்சந்தலையை கழுவுவதை தவிர்க்க வேண்டும்.