வறண்ட முடியை புஷ்டியாக்கும் வாழைப்பழ ஹேர் மாஸ்க்!

வாழைப்பழங்களில் பலவிதமான சத்துகள் அடங்கியுள்ளன. இவை நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவது மட்டுமல்லாமல் நமது முடியை பராமரிக்கவும் உதவுகிறது. இது தலைமுடியை மென்மையாக்குவதற்கும், முடி உதிருவதை தடுப்பதற்கும், வறண்ட முடியை புஷ்டியாக்குவதற்கும், பொடுகை போக்குவதற்கும் உதவுகிறது.

இப்படி பல நன்மைகள் நிறைந்த வாழைப்பழத்தை உபயோகப்படுத்தி நம் வீட்டில் வாழைப்பழ ஹேர் மாஸ்க் தயாரிப்பது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருள்கள் : தலைமுடியின் நீளத்தைப் பொறுத்து தேவையான அளவு தேன் (மனுகா தேன் உபயோகப்படுத்துவது சிறந்தது), ஒன்று அல்லது இரண்டு பழுத்த வாழைப்பழங்கள்

செய்முறை
பழுத்த வாழைப்பழத்தை தோலுரித்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள். அதன்பின் பிசைந்த வாழைப்பழத்தில் தேன் கலந்து நன்கு மிக்ஸ் பண்ணுங்கள். மிக்ஸ் செய்த மாஸ்க்கைப் உங்கள் உச்சந்தலையில் மற்றும் உங்கள் முடிகளுக்கிடையில் கவனமாக தேய்த்து கொள்ளுங்கள்.

தேய்த்த பிறகு 10-15 நிமிடங்கள் ஊற விடவும். அதன் பின் சுத்தமான நீரில் இந்த மாஸ்க் போகும் வரை நன்கு முடியை கழுவுங்கள். கழுவிய பிறகு கெமிக்கல் இல்லாத ஹேர் கண்டிஷனர் உபயோகப்படுத்தி குளியுங்கள். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால் வறண்ட முடியை புஷ்டியாக்கி பொடுகை முற்றிலும் விலக்கலாம்.