இனிமேல் லிப்ஸ்டிக் போடும்போது கண்டிப்பாக இதை பண்ணுங்க...அப்போ அழகா தெரிவீங்க!!

முகத்திற்கு அழகு சேர்ப்பதில் உதடுகள் முக்கிய இடம் வகிக்கின்றன. உதடுகளின் அமைப்பு பெறுத்து அதற்கு ஏற்றவாறு லிப்ஸ்டிக் போட்டால் தான் பார்க்க அழகாக தெரியும். இந்த பதிவில் நாம் லிப்ஸ்டிக் எப்படி போடுவது என்பதை தெரிந்து கொள்ளலாம். மெல்லிய, தடிமனான, சொப்பு என உதடுகளின் அமைப்பு, நிறம் வேறுபடுகிறது.

முகத்துக்கு ஏற்ற மாதிரி இல்லாமல் சிறிதாக சொப்பு போன்ற வாய் உள்ளவர்கள் லிப்ஸ்டிக்கை உதடுகளின் இரு முனைகளிலும் சற்று அதிகப்படியாக பூசுங்கள். வாய் சற்று பெரிதாகத் தெரியும்.

தடித்த உதடுகள் உள்ளவர்கள் உதட்டுக்கு உட்புறமாக லிப்ஸ்டிக் போடுங்கள். இயற்கை நிற லிப்ஸ்டிக்கை லேசாகத் தடவினால் போதும். மெல்லிய உதடு உள்ளவர்கள் கீழ் உதட்டில் டார்க் நிறமும் லைட் நிறத்தை மேல் உதட்டிலும் பூசுங்கள். பிறகு உதட்டுக்கு வெளியில் பென்சிலால் கோடு போடுங்கள். தடித்த உதடு என்றால் உட்புறமாக போடுங்கள்.

மாநிற பெண்கள் லைட் ஆரஞ்ச் கலர், கருப்பு நிற பெண்கள் லைட் சிவப்பு, சிவப்பு பெண்கள் லைட் ரோஸ் (பிங்க்) லிப்ஸ்டிக் பயன்படுத்தலாம். உதடுகளின் ஈரப்பசையை நீக்கிவிட்டு லிப்ஸ்டிக் போட்டால் சீக்கிரம் அழியாது. காலையில் லைட் கலர் லிப்ஸ்டிக்கும், மாலையில் பளிச் நிறத்திலும் போடுங்கள். ஆடைக்கு ஏற்ற நிறத்தைத் தேர்ந்தெடுத்து போடலாம்.

டார்க் கலர் போட்டால் வயது அதிகமாக காட்டும். லைட் கலர் கவர்ச்சியாக இருக்கும். வீட்டில் இருக்கும் போது லிப்ஸ்டிக் வேண்டாம். அடிக்கடி உபயோகித்தால் உதடுகள் கருமையாகி விடும்.