ஆரஞ்சு பழம் தரும் அழகு நன்மைகள்!

ஆரஞ்சு பழம் அழகு சேர்க்க கூடிய ஒரு பொருளாகும். இந்த ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி நிறைந்திருப்பதால் இது நமது உடலுக்கு வசீகரத்தை அள்ளித் தரக்கூடியது. இந்த பதிவில் ஆரஞ்சு பழம் தரும் அழகு நன்மைகளை பார்க்கலாம்.

முகத்தில் பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் மாறாத தழும்பாக இருந்தால், அதனை சரி செய்து கொள்ள நீங்கள் முதலில் செய்ய வேண்டியவை. ஆரஞ்சு தோலை அரைத்து விழுதாக்கி கொள்ள வேண்டும். இந்த அரைத்தவிழுது – 1/4 ஸ்பூன், கசகசா விழுது – 1 ஸ்பூன், சந்தன பவுடர் – 1 ஸ்பூன் இவற்றை எல்லாம் சேர்த்து கலந்து ஒரு கெட்டியான விழுதாக்கி கொள்ளுங்கள். இதனை தினமும் தூங்கப் போகும் முன் பருக்கள் வந்த இடத்தில் மூடுவது போல் பூசி கொள்ள வேண்டும். பின் காய்ந்ததும் முகத்தை கழுவி விடுங்கள். இதனை செய்தால் வடு மறைவதுடன், மேலும் பருக்கள் வருவதும் நின்று விடும்.


முகம் வெளி தூசுகளால் களையிழந்து காணப்பட்டால் அந்த முகத்தை ஒளியேற்ற இதனை செய்யுங்கள். ஆரஞ்சு தோலை பவுடராக்கி கொள்ளுங்கள். இந்த பவுடருடன் முல்தானிமட்டி, சந்தனம் இவை மூன்றையும் சம அளவு வீதம் எடுத்து தயிருடன் கலந்து, முகத்துக்கு பேக் போட்டு வர பேஷியல் செய்தது போல் முகம் பிரகாசமாக ஜொலிக்கும். தயிருக்கு பதிலாக ஆரஞ்சு ஜூஸ் சேர்த்துக் கொள்ளலாம்.

தூக்கமின்மையால் கண்களில் ஏற்படும் சோர்வை நீக்கி, கண்களை பிரகாசமாக்க, ஆரஞ்சு ஜூஸை ஃ பிரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக்குங்கள். ஐஸ் கட்டியான பிறகு இதை ஒரு வெள்ளை துணியில் கட்டி, கண்ணுக்கு மேல் ஒத்தி போடுங்கள். இப்படி ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்து வரும் போது, கண்கள் பிரகாசமாக காணப்படும்.