தோல் பராமரிப்புக்கு வைட்டமின் சி நிறைந்துள்ள ஆரஞ்சு பொடி!

வைட்டமின் சி தோல் பராமரிப்புக்கு மிகவும் பயனுள்ள பொருட்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இது உங்கள் தோல் பராமரிப்பு துயரங்களைத் தீர்க்க உதவும். கோடுகள், தளும்புகள், முகப்பரு வடுக்கள் போன்ற அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும். எனவே, எளிய முறையில் வீட்டில் தயாரிக்கும் வைட்டமின் சி நிறைந்துள்ள முகப்பூச்சு பற்றி தெரிந்துகொள்வோம்.

நீங்கள் ஆரஞ்சு பழத்தை சாப்பிடும் போது, அதன் தோலை தூக்கி எறியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தோலை நன்றாக கழுவி குறைந்தது 2 நாட்களுக்கு சூரிய ஒளியில் நன்றாக காய வைக்கவும். அடுத்து அதை அறைத்து நன்றாக பொடி செய்து கொள்ளுங்கள்.

ஒரு தேக்கரண்டி ஆரஞ்சு பொடியை எடுத்து அதனுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி, அரை தேக்கரண்டி தேன் மற்றும் தயிர் ஆகியவற்றை கலந்து கொள்ளவும். அனைத்தையும் ஒன்றாக கலந்து அதை உங்கள் முகத்தில் பூசிக் கொள்ளவும். உங்கள் கழுத்துப் பகுதிகளிலும் பூச மறந்துவிடாதீர்கள். இதை 15 நிமிடங்கள் காயவைத்து குளிர்ந்த நீரில் கழுவவும். நல்ல பயனைப் பெற இந்த முகப்பூச்சை வாரத்துக்கு இரண்டு முறை பூசவும்.

கொலாஜன் (collagen) உற்பத்தியை அதிகரிப்பதில் வைட்டமின் சி முக்கிய பங்கு வகிக்கிறது. தேன் மற்றும் மஞ்சள் ஆகியவற்றில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன எனவே அவை நச்சுகளை அகற்ற உதவுகிறது. தயிர் உங்கள் சருமத்தை எண்ணெய் பிசுக்காக மாற்றாமல் பிரகாசமாகவும் ஈரப்பதமாகவும் மாற்ற உதவுகிறது.