முகம் பொன்னிறமாக ஜொலிக்க...கேரட் பேசியல்!!

காய்கறிகளும் பழங்களும் சாப்பிடுவது ஆரோக்கியத்தை மட்டுமல்ல நம் அழகையும் அதிகரிக்கும். கேரட்டில் உள்ள சத்துக்கள் கண்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்றது என்பது நாம் அறிந்ததே. அதே போல் கேரட் சாப்பிடுவதால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக உடல் எடை ஆரோக்கியமாவதுடன், அதிக வசீகரத்துடன் காணப்படுவார்கள். வெறும் 2 மாதங்கள் மட்டுமே பழங்கள், காய்கறிகளை அதிகம் உட்கொண்டால் இதன் பிரதிபலனை உடனே உணர முடியும்.

கேரட் பேசியல்:
இரண்டு கேரட்டினை எடுத்து நன்றாக கழுவி வேகவைக்கவும். அதனை மசித்து முகத்தில் அப்ளை செய்யவும். நன்றாக உலர வைத்து பின்னர் அதனை உரித்து எடுக்கவும். பின்னர் வெது வெதுப்பாக நீரில் பஞ்சினை நனைத்து முகத்திற்கு ஒத்தடம் கொடுக்கவும்.

வாரம் இருமுறை கேரட் மாஸ்க் போட முகம் பொன்னிறமாக ஜொலிக்கும். கேரட்டுடன் சர்க்கரை சேர்த்து கெட்டியாக அரைத்து அதை முகத்தில் அப்ளை செய்து மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்து வர முக சருமத்தில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இறந்த செல்கள் இருந்தால் உதிர்ந்து விடும். புதிய ஆரோக்கியமான செல்கள் உற்பத்தியாகும்.

கேரட்டில் உள்ள பொட்டாடிசியம், வைட்டமின் எ போன்றவை உடலின் நச்சுக்கழிவுகளை வெளியேற்றுகிறது. இதனால் முகப்பரு, கரும்புள்ளி உள்ளிட்ட சரும நோய்கள் ஏற்படுவதில்லை. கேரட்டினை தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால் சருமப் பாதுகாப்பிற்காக விலை உயர்ந்த ரசாயனப் பொருட்கள் வாங்காமல் தவிர்க்கலாம்.