கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க உதவும் கேரட்

சென்னை: கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் கேரட்... நாம் தினமும் சமையல் பயன்படுத்தக்கூடிய கேரட்டை பயன்படுத்தி நம் கூந்தல் பிரச்சனைகளை தீர்க்க முடியும். அந்த வகையில் முடி வளர்ச்சியை அதிகரிக்க கேரட்டை பயன்படுத்துவது பற்றி அறிந்து கொள்ளலாம்.

இன்றைய காலத்து இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு முக்கிய பிரச்சனையாக இருப்பது முடி உதிர்வது. இந்த முடி உதிர்வதற்காக பல மருத்துவரிடம் சென்று அதிக அளவு செலவு செய்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.


நாம் தினமும் சமையல் பயன்படுத்தக்கூடிய கேரட்டை பயன்படுத்தி நம் கூந்தல் பிரச்சனைகளை தீர்க்க முடியும். அந்த வகையில் முடி வளர்ச்சியை அதிகரிக்க கேரட்டை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்: கேரட் - ஒன்று, அவகோடா - 1/2 பழம், தேன் -2 டேபிள்ஸ்பூன்.

பயன்படுத்தும் முறை: மேலே கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும். பின்னர் உங்கள் உச்சந்தலையில் இந்த விழுதை தடவி மென்மையாக மசாஜ் செய்யவும்.


உங்கள் உச்சந்தலையில் உள்ள எல்லா முடிகளுக்கும் இந்த விழுது உள்ளவாறு முழுவதுமாக தடவி அரை மணி நேரம் ஊற வைத்து, பின்னர் மூலிகை ஷாம்பு கொண்டு தலையை அலசவும். இதனை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தி வந்தால் சரியான ரிசல்ட்டை தரும்.