பொடுகு பிரச்னையை எளிதில் இயற்கை வழியில் போக்கலாம்!!!

சென்னை: பொடுகு பிரச்சனை பலரை பாடாய்படுத்தும் ஒரு பிரச்சனையாகும். தலையில் பொடுகு இருப்பதால், பலர் தங்களது தன்னம்பிக்கையை இழந்து விடுகிறார்கள். சில நேரங்களில் பொடுகு பிரச்சனை அதிகமாக இருப்பவர்கள் வெளியே செல்வதற்கு கூட யோசிப்பது உண்டு.

பொடுகு பிரச்சனை உருவாக பல காரணங்கள் உள்ளன. இதை சரி செய்ய பலர் பலவித ரசாயனம் கலந்த பொருட்களையும் பயன்படுத்துகிறார்கள். எனினும் இவற்றால் நன்மையை விட தீமையே அதிகமாக ஏற்படுகின்றது. பொடுகு பிரச்சனையை தீர்க்க பல இயற்கையான வழிமுறைகள் உள்ளன.

பாதாம் எண்ணெய்: பாதாம் எண்ணெய் முடி மற்றும் வேர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் வைட்டமின் ஈ, புரோட்டீன் மற்றும் ஃபோலிக் அமிலம் இருப்பதால் இது முடியை பளபளப்பாக மாற்றும். பாதாம் எண்ணெயைக் கொண்டு முடியை மசாஜ் செய்தால், பொடுகு பிரச்சனை மற்றும் கூந்தலில் ஏற்படும் பிற பிரச்சனைகள் நீங்கும். ஆனால், பாதாம் எண்ணெயில் சில பொருட்களைக் கலந்து பயன்படுத்தினால், தலைமுடி உறுதியாவதுடன் பளபளப்பாகவும் இருக்கும்.

எலுமிச்சை சாறு: பாதாம் எண்ணெயுடன் எலுமிச்சைச் சாற்றை கலந்து பயன்படுத்தினால், பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம். இதற்கு, ஒரு பாத்திரத்தில் சில துளிகள் பாதாம் எண்ணெய் மற்றும் சில துளிகள் எலுமிச்சை எண்ணெய் கலந்து உங்கள் தலைமுடியில் தடவ வேண்டும். பின்னர், கூந்தலை கைகளால் லேசாக மசாஜ் செய்ய வேண்டும்.

மசாஜ் செய்த பிறகு, நீங்கள் விரும்பினால், உங்கள் தலைமுடியை 1 மணி நேரம் கழித்து ஷாம்பு செய்யலாம். ஒரு இரவு முழுக்க முடியை அப்படியே இருக்க விட்டு, பின்னர் காலையில் முடியில் ஷாம்பு தடவி அலசலாம். இப்படி செய்வதன் மூலம் முடி வளர்ச்சியும் வேகமாக நடக்கும்.

பாதாம் எண்ணெயுடன் வாழைப்பழத்தை கலந்தால், இந்த பிரச்சனைக்கு தீர்வு காணலாம். இரண்டையும் ஒரு பாத்திரத்தில் நன்கு கலந்து, அந்த கலவையை முடியில் தடவவும். இந்த கலவையை உங்கள் தலைமுடியில் தடவி அரை மணி நேரம் அல்லது 1 மணி நேரம் கழித்து, ஷாம்பு போட்டு முடியை அலசலாம். இவ்வாறு செய்வதன் மூலம் கூந்தல் அழகாக மாறுவது மட்டுமின்றி, கூந்தல் பளபளப்பாகவும் இருக்கும்.