வெயிலால் சருமத்தில் கருமையா... இதோ தீர்வு!!!

வெயிலால் சருமம் கருமை ஆகிறது. இந்த கருமையினைச் சரிசெய்யும் ஃபேஸ்பேக்கினை இப்போது எப்படித் தயார் செய்வது என்று பார்க்கலாம். இது எளிய முறை மட்டுமில்லை. இயற்கை வழிமுறையும் கூட. அதனால் எந்த வித பக்க விளைவுகளும் இல்லை.

தேவையானவை:

வைட்டமின் ஈ காப்சியூல்- 2

தேங்காய்- 5 துண்டு

செய்முறை: மிக்சியில் தேங்காய்த் துண்டுகளைப் போட்டு தண்ணீர் சேர்த்துப் பால் பிழிந்து கொள்ளவும். அடுத்து இந்த தேங்காய்ப் பாலில் வைட்டமின் ஈ காப்சியூல் சேர்த்தால் ஃபேஸ்பேக் ரெடி.

இந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து 30 நிமிடங்கள் ஊறவிட்டு அலசினால் முகத்தின் கருமை சரியாகும். இதை தொடர்ந்து செய்து வந்தால் உடலில் வெயிலால் ஏற்பட்ட கருமை படிப்படியாக மாறிவிடும்.