சருமத்தை பாதுகாக்கும் எளிய வழிகள் உங்களுக்காக!!!

சென்னை: 30 வயதை எட்டுவது என்பது ஒரு முக்கியமான மைல்கல். வயது கூட கூட, புதிய சரும பிரச்சனைகள் ஏற்படலாம். 25 வயதுக்கு மேலே, உங்கள் சருமத்தில் நீங்கள் கவனித்த மெல்லிய சுருக்கங்கள் இப்போதுகொஞ்சம் ஆழமாகலாம்.

உங்கள் தோல் விரைவாக ஈரப்பதத்தை இழந்து, மெல்லியதாகவும், கரடுமுரடானதாகவும் மாறும். அதனால்தான் 30 வயதில் உடல் பராமரிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

தண்ணீர்: நிறைய தண்ணீர் குடித்தால், உடலும், சருமமும் ஆரோக்கியமாக இருக்கும். உங்களைப் புத்துணர்ச்சியுடன் வைக்கவும் இது அவசியம்.

எக்ஸ்ஃபோலியேட்: ஒவ்வொரு 2-4 வாரங்களுக்கும் உங்கள் தோல் அதன் மேற்பரப்பில் குவிந்திருக்கும் இறந்த செல்களை உதிர்த்துக்கொண்டே இருக்கிறது. இந்த செல்களை அகற்றாவிட்டால், இவை உங்கள் சருமத்தை மந்தமானதாகவும், கருமையாகவும், மற்றும் வறண்டதாகவும் மாற்றிவிடும்.