கண்களுக்கான அழகுக்குறிப்பு!

சிலருக்கு கண்களுக்கு கீழ் சுருக்கங்கள் காணப்படும் அதை சரி செய்யும் அழகு குறிப்பு பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:
ஜோஜோபா எண்ணெய் - 1 தேக்கரண்டியளவு
அரைத்த ஆரஞ்சு தோல் பவுடர் - 1 தேக்கரண்டி
வேப்ப எண்ணெய் - 3 முதல் 4 துளி

இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக கலந்து கண்களை சுற்றி மெதுவாக மசாஜ் செய்யுங்கள். பின் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கழித்துக் கழுவுங்கள். இந்த முறையை ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்யலாம். இவ்வாறு செய்வதினால் கண் சுருக்கம் நீங்க ஆரமிக்கும்.

சிலருக்கு கண்கள் எப்பொழுதும் பொலிவிழந்து மிகவும் சோர்வாக காணப்படும். அவர்களுக்கான அழகு குறிப்பு

ஜோஜோபா எண்ணெய் - 2 தேக்கரண்டியளவு,
தேங்காய் எண்ணெய் -1 தேக்கரண்டியளவு
அப்ரிகாட் கர்னல் எண்ணெய் - 2 தேக்கரண்டியளவு ,
அவோகேடா எண்ணெய் - 2 தேக்கரண்டியளவு

அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கலக்கி கண்களைச் சுற்றித் தடவிவிட்டு படுகைக்குச் செல்லுங்கள். அடுத்த நாள் காலையில் எழுந்து கழுவுங்கள். இதனைத் தினமும் இரவு செய்யலாம். இவ்வாறு தினமும் செய்து வருவதினால் கண் சோர்வு நீங்க ஆரம்பிக்கும்.