முடி உதிர்வை எதிர்த்து போராடும் பூண்டு!

முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும் ஒரு முக்கிய மூலப்பொருளாக பூண்டு திகழ்கிறது. கூந்தல் ஆரோக்கியத்திற்கு, தேங்காய் எண்ணெய் பல்வேறு நன்மைகளை வாரி வழங்குகிறது. பூண்டுடன் இணைந்து தேங்காய் எண்ணெய், முடி உதிர்வை எதிர்த்து போராடுகிறது. இரண்டு பல் பூண்டை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

தேங்காய் எண்ணெய்யை மிதமாக சூடாக்கி, அதில் பூண்டைச் சேர்க்கவும். இந்த கலவையை உங்கள் தலையில் நன்றாக மசாஜ் செய்து தடவவும். அரை மணி நேரம் இந்த எண்ணெய் உங்கள் தலையில் ஊறியவுடன், வழக்கமான ஷாம்பூ பயன்படுத்தி தலையை அலசவும்.

பூண்டுடன் தேன் சேர்த்து முடி உதிர்வுக்கான சிகிச்சையில் பயன்படுத்தலாம். 8 பல் பூண்டை எடுத்து மசித்து, இரண்டு ஸ்பூன் அளவிற்கு சாறு எடுத்துக் கொள்ளவும். இந்த சாற்றில் ஒரு ஸ்பூன் அளவு தேன் சேர்த்து கலக்கவும். இந்த கலவையை உங்கள் தலையில் உச்சி முதல் நுனி வரை தடவவும்.

பிறகு 20 நிமிடங்கள் ஊற விடவும். 20 நிமிடம் கழித்து, வழக்கமான ஷாம்பூ கொண்டு தலையை அலசவும். ஒரு வாரத்தில் இரண்டு முறை இந்த தீர்வைப் பின்பற்றுவதால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.