சரும வறட்சியிலிருந்து நிரந்தர தீர்வு கிடைக்க..!

இயற்கையாகவே சில பெண்களுக்கு வறண்ட சருமம் காணப்படும். அவர்களுக்குச் சரும வறட்சியிலிருந்து நிரந்தர தீர்வு கிடைக்காது. அதற்காக வருந்தாமல், கீழ் குறிப்பிட்டுள்ள முறைகளில் ஒன்றை முறையாகச் செய்து வந்தால், முகம் பொலிவு பெறும்.

குடிநீருக்குச் சரும வறட்சியைப் போக்கும் இயல்பு இருக்கிறதா? என்ற சந்தேகமே வேண்டாம். அதிகம் நீரைக் குடியுங்கள். உடல் குளிர்ச்சியே பாதி சரும வறட்சியை போக்கிவிடும். உடலில் உள்ள நீர்ச்சத்து, தோலுக்கு ஈரப்பதத்தைக் கொடுக்கும்.

வெந்தயத்தையோ அல்லது அதன் இலைகளையோ நன்கு அரைத்து, அத்துடன் தண்ணீர் சேர்த்து முகத்தில் தடவலாம். இதற்கும் வறண்ட சருமத்தை ஈரப்பதமாக்கும் இயல்பு உள்ளது.

குளியலின்போது நீண்ட நேரம் குளிப்பதைத் தவிருங்கள். அதிகபட்சம் 10 நிமிடங்களுக்கு மேல் கால்கள் நீரில் இருக்கக் கூடாது. இதனால் இயற்கையாக இருக்கும் எண்ணெய் மறைந்து தோல் வறண்டுவிடும். சூடான நீரில் குளிப்பவர்கள் அதை நிறுத்தி விட்டு குளிர்ந்த நீருக்கு மாறிக்கொள்ளுங்கள்.

மருதாணி இலைகளை நன்கு அரைத்து காலில் தடவி உலரவைத்து பின்பு கழுவினால் வறட்சி ஏற்படாது. வெடிப்பு பாதிப்பு கொண்டவர்கள், மருதாணியின் சாற்றை அதில் விடலாம்.

பப்பாளிப் பழத்தை நன்கு அரைத்து, அதைப் பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் மருதாணி வைப்பது போலவே, தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும், பாதத்தை தண்ணீரில் நனைத்து மறுபடியும் தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், பித்த வெடிப்பு குணமாகும்.