உதடுகள் உலர்வதை தடுக்க சில சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக!!!

சென்னை: உதடுகள் உலர்வதை தடுத்து சிவப்பாக மாற உங்களுக்கு சில டிப்ஸ்கள்.

ஒரு ஸ்பூன் ஜெல்லில் சிறிது சர்க்கரை கலந்து உதடுகளில் தடவ வேண்டும். பெண்களின் உதடுகள் சிவப்பு நிறமாக மாறி பெண்களுக்கு அழகை கூட்டி தரும். மேலும் படிக்க கடுமையான வெயில் காலங்களில் உதடுகளில் உள்ள செல்கள் இறந்து விடுவதால் உதடுகள் காய்ந்து கருப்பாகி விடுகிறது.

இதனால் பெண்களின் அழகுகளில் குறைபாடு ஏற்படுகிறது. இவ்வாறு உதடுகளில் இறந்த நிலையில் உள்ள செல்களை அவ்வப்போது அகற்ற வேண்டும்.

அப்போதுதான் அவை ஈரமாக இருக்கும். இதற்கு ஒரு ஸ்பூன் ஜெல்லில் சிறிது சர்க்கரை கலந்து உதடுகளில் தடவ வேண்டும். சிறிது நேரம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவவும். டூத் பிரஷில் சிறிது சர்க்கரை சேர்த்து உதடுகளில் தேய்த்தால் போதும். இதை வாரம் ஒருமுறை செய்தால் உதடு கருமை பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.

ஒரு கொத்து ரோஜா இதழ்களை அரைத்து, அதனுடன் சிறிது தேங்காய் பால் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து உதடுகளில் மெதுவாக தேய்க்கவும். அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நேரில் உதட்டை கழுவவும். இப்படி தினமும் செய்து வந்தால் ஒரு வாரத்தில் உதட்டில் உள்ள கருமை மறையும். அல்லது ஒரு ஸ்பூன் சர்க்கரையில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் இலவங்கப்பட்டை தூள் கலந்து உதடுகளில் பூசவும்.

அரை மணி நேரம் கழித்து பாலுடன் மென்மையான துணியை கொண்டு தேய்த்து தேய்த்து கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி செய்து வந்தால் இறந்த செல்கள் நீங்கி மென்மையாக மாறும். இரண்டு ஸ்பூன் ரோஜா இதழ் பொடியுடன் சிறிது சாக்லேட் பவுடர், சர்க்கரை மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்து கொள்ள வேண்டும்.

அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் உதடுகள் வெடிக்காமல் புத்துணர்ச்சி பெறும். மேலும் பெண்களின் உதடுகள் சிவப்பு நிறமாக மாறி பெண்களுக்கு அழகை கூட்டி தரும்.