வயதாகுவதை தடுத்து இளமையை தரும் தேன்!

வயதாகுவது என்பது அழகு சார்ந்தது மட்டும் கிடையாது. அது உடல் ஆரோக்கியத்தையும் சார்ந்தது. உடலுக்கு தேவையான ஊட்டத்துக்கள் கிடைத்து மற்றும் உடலின் மெட்டா பாலிசத்தை சரி செய்தாலே போதும் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். ஆக்ஸிஜன் நிறைந்த சுத்தமான இரத்தம் உடலில் இருந்தால் போதும் எல்லா உள்ளுறுப்புகள் மற்றும் சருமம் எல்லாம் ஆரோக்கியமாக செயல்படும். இதன்மூலம் நாம் சீக்கிரம் வயதாகாமல் இருக்கலாம்.

வயதாகுவதை தடுப்பதில் தேன் ஒரு சிறந்த பொருளாக செயல்படுகிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வயதாகுவதை தடுக்கும் இயற்கை கெமிக்கல்கள் போன்றவை இவற்றில் உள்ளன. இவை ஒரு இயற்கை மாய்ஸ்சரைசர் ஆகவும் செயல்படுகிறது. ஏன் நூறு வருடங்கள் ஆனாலும் பாட்டிலில் உள்ள தேன் கெட்டு போகாமல் அப்படியே இருக்கும். உங்கள் இளமையை பெற தேனை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
1/2 டீ ஸ்பூன் சுத்தமான தேன்

செய்முறை
தேனை உங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்ய வேண்டும். 20 நிமிடங்கள் அப்படியே வைத்து பிறகு சூடான மற்றும் குளிர்ந்த நீர் கலந்த கலவையில் அலச வேண்டும். இதை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை என்ற விதத்தில் செய்தால் நல்ல பலனை காணலாம்.